புதன், 13 டிசம்பர், 2023

CINEMA TALKS - KAAVALAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் மலையாளம் மொழியில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படத்தின் நேரடியான மறுபதிப்பு. இந்த படம் ரொம்ப கியூட்டான ஒரு காதல் கதைதான். பூமிநாதன் எப்போதுமே அவருக்கு இன்ஸ்பிரேஷன்னாக எடுத்துக்கொண்ட செம்மனுர் முத்துராமலிங்கம் அவர்களுடைய வீட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இங்கே பூமியை நன்றாக தெரிந்துகொண்டு இருக்கும் முத்துராமலிங்கம் அவருடைய படிப்பு தடைபட்டு போகக்கூடாது என்பதற்காக அவருடய மகள் மீரா படிக்கும் கல்லூரியிலேயே படிக்க வைத்து அவருடைய மக்களுக்கு பாதுகாவலராக பூமியை நியமிக்கிறார், பூமி எப்போதுமே பாதுகாப்பதில் மட்டும் கவனமாக இருப்பதால் விளையாட்டாக மீரா பூமியிடம் குரலை மாற்றிக்கொண்டு ஃபோன்னில் பேசிக்கொண்டு முகம் பார்க்காமல் பெயர் சொல்லாமல் காதலிப்பதாக கலாய்க்கவே பின்னாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாகவே நேசிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் சேர்ந்து இருந்தால் பூமியின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. வடிவேலு நகைச்சுவை , விஜய் படங்களில் எப்போதுமே இருக்கும் ஸ்டைல்லான சண்டை காட்சிகள் என்று பொழுதுபோக்கு வேல்யூ இந்த படத்துக்கு நிறையவே இருந்தாலும் படம் முடியும்போது ஒரு நிறைவான காதல் கதை படத்துக்குள் இருப்பதால் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்று இந்த விஷயத்தை சொல்லலாம்.  இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த படம் போலவே நிறைய படங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை படித்து மகிழவும்.  இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் கிளிக் பண்ணுங்க !! இந்த படம் சோகமான படம் என்பதால் ஒரு நகைச்சுவை சொல்லட்டுமா ! பொதுவாக துணிக்கடையில் பெண்கள் கேட்கும் இரண்டே கேள்விகள் என்ன ? 1 இந்த கலரில் வேறு டிசைன் இருக்குதா ? இந்த டிஸைனில் வேறு கலர் இருக்கிறதா ? 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...