இன்னைக்கு ஒரு பொதுவான பேருந்து பயணம் அல்லது இரயில் பயணம் என்றால் நம்மோடு பயணிப்பவர்களிடம் பேச மறுக்கிறோம், நம்மிடம் ஒரு ஃபோன் இருந்தால் நம்முடைய ஸ்மார்ட்ஃபோன்னை பார்த்துக்கொண்டு மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையான வாழ்க்கையில் இன்ட்ராக்ஷன்ஸ்ஸை குறைத்து சோசியல் மீடியாவில் நம்முடைய தகவல் சேகரிப்புகளை பண்ணிக்கொண்டு இருக்கிறோம். கடைகளுக்கு சென்றால் பொருட்களை வாங்காமல் வெளியே போனால் அவமானம் என்பதால் ஒரு சிறிய பொருளையாவது வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்று மனது சொல்வதால் ஏதாவது ஒரு சின்ன பொருளை வாங்கிவிட்டுதான் செல்கிறோம் ஆனால் ஆன்லைன்னில் அப்படி ஒரு பிரச்சனை வரப்போவது இல்லை. இந்த மாதிரி இன்றைக்கு தேதிக்கு இருக்கும் புது ஜெனெரேஷன் இளைஞர்களின் உலகம் போன 10 வருடங்களுக்கு முன்னால் பிறந்தவர்களின் உலகத்தை விட ரொம்பவுமே வித்தியாசமானது. இந்த காலத்தில் சின்ன குழந்தையாக பிறந்த நாள் முதல் ஒரு ஒரு நாள் நினைவுகளுமே இன்ஸ்டாகிராமில் போட்டோக்களாக மற்றும் வீடியோக்களாக பதிவேற்றம் செய்துகொண்டு இருக்கிறோம். இந்த புது ஜெனரேஷன் என்னை பொறுத்தவரைக்கும் நிறைய போட்டிகள் நிறைந்த ஜெனெரேஷன் என்றே சொல்லலாம். ஒரு பையன் பிறக்கும்போதே அவனுக்கான பணம் சம்பாதிக்கும் போட்டி அதிகமாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியவில்லை அவனுடைய கைகளில் இன்வெஸ்ட்மேன்ட் இல்லை என்றால் பொல்லாதவன் படத்தில் இடம்பெறும் தனுஷ் அவர்களின் கதாப்பாத்திரம் போல வாழ்க்கையில் எந்த ஆம்பிஷனும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துகொண்டு இருக்கும். இங்கே நிறைய சாதனைகளுக்கு பணம் தேவை , பணம் தேவை , பணம் கண்டிப்பாக தேவை, இதுக்கு முந்தைய ஜெனெரேஷன் சப்போர்ட் இல்லை என்றால் இந்த ஜெனெரேஷன் எந்த இன்வெஸ்ட்மென்ட்டுமெ இல்லாமல் கடைசியில் தோற்றுப்போக வேண்டியது இருக்கும். ஒரு சைக்கிள் மட்டும் வைத்துக்கொண்டு சாதித்து காட்டினேன் என்பது எல்லாம் போன ஜெனெரேஷன்தான். இந்த ஜெனெரேஷனில் போன ஜெனெரேஷனை விடவும் 10 மடங்கு திறமைகள் இருந்தாலும் உங்களை விட 1000 மடங்கு திறமைகளுடன் வெற்றியாளர்கள் இருப்பார்கள் அவர்கள் உங்களை பார்த்து நக்கலாக சிரித்துவிடுவார்கள். இந்த ஜெனெரேஷன் என்பது உயிரோடு இருக்கும் 800 கோடி பேரும் வெற்றிக்காக விளையாடும் ஒரு மரண விளையாட்டு. இதனை புரிந்துகொண்டால் உங்களின் அடுத்த தலைமுறை சிறப்பானதாக இருக்கும். இந்த ஜெனெரஷன் நல்லா இருக்கவேண்டும் என்றால் தொடர்ந்து நம்ம வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படித்துவிடுங்கள். வருடக்கணக்கில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். மொக்கை போட மாட்டேன் !!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக