Tuesday, June 5, 2018

GENERAL TALKS - NICE TAMIL BLOG - நமது தமிழில் ஒரு இணையம் !! - [REGULATION-2024-00001]




இந்த போஸ்ட் நான் தொடர்ந்து எடிட் பண்ணிக்கொண்டே இருக்கிறேன். நமது வலைத்தளத்துக்கு யாரேனும் புதிதாக வந்ததுமே முதல் போஸ்ட் என்ன என்று பார்க்கும் ஆர்வத்தில் கண்டிப்பாக இந்த போஸ்ட் பார்ப்பார்கள் என்பதால் அபபடி ஆர்வத்தில் வந்து பார்க்கும் உங்களுக்கு நான் ஒரு முக்கியமான கருத்து சொல்ல போகிறேன். நம்ம வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் போராடினாலும் மரணத்தை தடுக்க முடியாது. இங்கே நம்ம வாழ்நாள் முடியும் வரைக்கும் எத்தனையோ செயல்களை செய்கிறோம். வேலைக்கு போகிறோம் , பணம் சம்பாதிக்கிறோம் , பொழுதுபோக்கு செய்கிறோம் , பேசுகிறோம் , பயணங்கள் பண்ணுகிறோம் ஆனால் நாம் சாகப்போகிறோம் என்னும்போது என்ன பண்ணி என்னதான் பிரயோஜனம் ? . மரணம் வந்து நம்மை மண்ணோடு மண்ணாக மாற்றிவிடுகிறது. எங்கேயோ இருளுக்குள் இருந்து புதிதாக ஒளியில் பிறந்து கண்களை திறந்து காட்சிகளை பார்த்துவிட்டு காதுகளால் உலக சத்தங்களை கேட்டுவிட்டு கருத்துக்களும் சொல்லிவிட்டு கொஞ்சம் வருடங்கள் வாழ்கிறோம். ஒளி போனதும் மறுபடியும் இருள் உலகத்தில் நிரந்தரமாக அடைந்துவிடுகிறோம். நம்மால் பார்க்க முடியாத நம்மால் கேட்க முடியாத நம்மால் உணர முடியாத ஒரு இருள் என்று நான் இந்த மரணத்தை தான் சொல்கின்றேன். நம்முடைய மண்டைக்குள்ளே இருக்கும் மூளை எப்போது நம்முடைய வாழ்க்கையின் சம்பவங்களை நினைவுகளாக சேகரிக்க தொடங்குகிறது என்று நமக்கு தெரிவதே இல்லை. மெமரி கார்டு , பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்று எக்ஸ்ட்டேர்னல் மெமரிக்களை சப்போர்ட் பண்ணாத இந்த மூளை நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு பண்ணுவதும் இல்லை. நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நிறைய சம்பவங்களில் குத்து மதிப்பாக ஏதோ ஒரு விஷயத்தை நம்முடைய மனசுக்குள்ளே பதிவை பண்ணிவிட்டு அதனுடைய வேலையை பார்த்ததாக கணக்கு காட்டிவிடுகிறது.  நம்முடைய வாழும் காலம் எப்போது முடிந்தாலும் நாம் இறந்து போய்விடுவோம் இப்படி நாம் இறந்து போவதால் சேர்த்து வைக்கும்  ஞாபகங்களும் டெலீட் ஆகி போய்விடுவதால் வாழ்க்கையில் என்ன மயிருக்கு இந்த வாழ்க்கை எனக்கு கிடைதது என்று ஒரு தெளிவு என்பதே எனக்கு இல்லை. இந்த வாழ்க்கைக்கு காரணம் தேடுவது கனவுகளுக்கு காரணம் தேடுவது போன்றதாகும். இது ஒரு வீடியோகேம் போன்ற ஒரு விஷயம் . நம்மால் முடிந்தால் ஜெயிக்கிறோம் இல்லை என்றால் தோல்வியை ஏற்றுக்கொண்டு நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி மட்டையாகிறோம். இதுதான் வாழ்க்கையை பற்றிய என்னுடைய புரிதல். இந்த வார்த்தைகளை வைத்தே என்னுடைய இன்டெல்லிஜேன்ஸ் லெவல் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்ற காரணத்தால் 


JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...