திங்கள், 23 செப்டம்பர், 2024

MUSIC TALKS - NIRPADHUVE NADAPPADHUVE PARAPPADHUVE NEENGAL ELLAM SOPPANAM THAANO ? PALA THOTRA MAYAKKANGALO ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே 
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ ?
பல தோற்ற மயக்கங்களோ ?
சொப்பனம் தானோ ?
பல தோற்ற மயக்கங்களோ ?'

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ?


உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ ?
அற்ப மாயைகளோ ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழைதானோ ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய்தானோ ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே 
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ ?
பல தோற்ற மயக்கங்களோ ?
சொப்பனம் தானோ ?
பல தோற்ற மயக்கங்களோ ?'

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ?
உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ ?
அற்ப மாயைகளோ ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...