செவ்வாய், 24 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MAZHAIYE MAZHAIYE THOOVUM MAZHAIYE IDHU KAADHAL THAANA ? THANIYAAI THANIYAAI NANAINDHEN MAZHAIYE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



விழியே விழியே பேசும் விழியே 
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே 
இது காதல் தானா 
தனியே தனியே நனைந்தேன் மழையே

மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல 
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன் 
நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய் 
செல்லாமல் செல்லாமல் செல்வாய்

மாாி மாாி மழையே மாாி மாாி மழையே 
மாாி மாாி மழையே

உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது 
உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது 
உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது 
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது

போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
போடி போ நீ போ என் உலகம் உறைகிறது


விழியே விழியே பேசும் விழியே 
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...