இந்த சீரிஸ் பற்றி பேசும்போது கலர்கிரேடிங் பற்றி பேசியே ஆக வேண்டும், மங்கிய 70 களின் கருப்பு வெள்ளை படங்களுடைய நிறத் தொகுப்பை கொஞ்சமாக வண்ணம் சேர்த்த நிறத் துளிகளுடன் நெய்து புது வகையில் இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள் !
தமிழ் டப்பிங் வசனங்களில் இந்த வெளிப்படையான நகைச்சுவையையும் மறைந்துள்ள ஆபத்தையையும் ஒரு ஒரு வார்த்தையும் பிரதிபலிக்கிறது. நிறைய இரத்த காட்சிகளை கலர் மட்டும் சேஞ்ச் பண்ணியதன் மூலமாக டொன் மெயின்டய்ன் செய்தது சிறப்பான புத்திசாலித்தனம் என்றே சொல்லலாம் !
காமிரா மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ் டிஜிட்டல் ஓரங்களை மென்மையாக்கி ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ஓவியப்போன்ற அழகையும் தெளிவையும் வழங்குகிறது, இப்படி தெளிவாக WORLDBUILDING மற்றும் கேரக்ட்டர் டெவலப்மேன்ட்டை வேற லெவல்லில் கொடுத்து இருக்கிறார்கள் !
மேலும் இப்படி ஒரு விஷயம் செய்து கலர் கிரேடின்க்கில் தரமான சம்பவம் செய்தது துல்லியமாக சமநிலைப்படுத்தப்பட்ட கதையில் எல்லாமே கனவுப்போன்ற காட்சிகளில் கதாபாத்திரங்களை ஆடியன்ஸ் எதிர்பார்ப்பில் நிலைநிறுத்துகின்றன.
மற்றபடி ஒவ்வொரு காட்சியும் காலத்தால் மாறாத பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டம் என்ற லெவல்லில் ஹாரி பாட்டர் படங்களை கொஞ்சம் ரெஃபரென்ஸ் எடுத்து பேய் கதைகளை கலந்து உயிரோட்டத்தையும் ஒருங்கிணைத்து வேற லெவல்லில் கெத்து காட்டிவிட்டனர் பரோடேக்ஸன் குழுவினர் - அடுத்த PART TWO - க்கு வெயிட்டிங் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக