வியாழன், 28 ஆகஸ்ட், 2025

TOXIC FEMINISM - EXPLAINED IN TAMIL - நச்சுத்தன்மை பெண்வாதம் !

 




இங்கே "நச்சு பெண்வாதம்" - TOXIC FEMINISM என்ற கருத்தைச் சுற்றி விமர்சகர்கள் கூறும் 10 முக்கியமான கருத்துக்களை கவனித்தே ஆகவேண்டும். ஆண்களை வெறுப்பது இந்த பெண்களின் பொதுவான பெண்வாதமாக இவர்களுக்கு சப்போர்ட்டர்கள் கிடைக்கும்போது மாறியது, நச்சு பெண்வாதம் என்பது ஆண்களை வெறுப்பதைக் குறிக்கிறது, சமத்துவத்தை அல்ல. இந்த மாதிரியாக தப்பான வாதம் பேசும் இவர்கள் ஆண்-பெண் உடலியல் வேறுபாடுகள் பற்றிய விவாதங்களை முழுமையாக மறுப்பதுதான் மிகவும் வருத்தமானது, மருத்துவம் அல்லது கல்வி போன்ற துறைகளில் கூட ஆண்களுக்கு இணையான உடல் பலத்தோடு வேலை பார்க்கும் பெண்கள் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய திறன்களை பாராட்ட நினைக்காமல் ஆண்களை பேச்சில் காயப்படுத்த இதனை ஒரு வெகுவான காரணமாகவே கருதுவார்கள். ஆண்கள் சொன்னார்கள் என்பதற்காக மாறுபட்ட கருத்துகளை அடக்குவது வேறு பெரிய பிரச்சனையாக இருக்கிறது பெண்கள் கூறும் கருத்துகள் தப்பானதாக இருக்கும்போது ஆண்கள் சரியான கருத்துக்களை சொன்னாலும் இவைகள் "ஆண் வாதத்தை உட்கொண்டவை" என கூறி நிராகரிக்கப்படலாம்.


வீட்டில் இல்லாதரசியாக இருப்பது, குழந்தைகளின் தாயாக இருப்பது போன்ற பாரம்பரியமாக குடும்பத்தை அன்பாக வைத்துக்கொள்ளும்  தேர்ந்தெடுக்கும் பெண்களை இழிவுபடுத்தும் போக்கு இன்னுமே கஷ்டமானது ஆகும்.  மேலும் பெண்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடவேண்டும் என்று சொல்லும்போது, ஆண்கள் செய்யும் அதே செயல்களை தண்டனை கொடுத்து கஷ்டப்படுத்த வேண்டும் என்று கண்டனம் செய்வது. இந்த வகையில் இவர்கள் சொல்லும் கற்பனையான "எல்லா ஆண்களும் மோசமானவர்கள்" போன்ற கூற்றுகள் கொடுக்கும் ஆட்டிட்யூட் மக்களின் சமத்துவத்துக்கு மிகவும் எதிரானவை. கம்பேரிஸன் காரணமாக இல்லாத ஒரு பாதிக்கப்பட்ட நிலையை ஆயுதமாக மாற்றுவது குறிப்பாக கல்யாணம் ஆன பின்னால் எப்போதும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டி தனிப்பட்ட பொறுப்பை தவிர்ப்பது. ஆண்களுக்கு சங்கடத்தை கொடுப்பது.  ஆண்கள் கூறும் சிக்கல்கள் ( மனநலம், குடும்ப வன்முறை) குறித்து பேச மறுப்பது போன்றவைகளும் நடக்கிறது. பெண்வாதத்தின் உண்மையான நோக்கங்களை இந்த விஷயம் மிகைப்படுத்திய பேரசையாக மாற்றுகிறது.  சமத்துவத்தை விட ஆதிக்கத்தை நோக்கி நகர்வது, இயக்கத்தின் ஆதரவாளர்களை விலக்குகிறது. குறிப்பாக திருமணம் கடந்த உறவு நியாயமானது என்பது போல குறுகிய மனப்பான்மை கொண்ட மேற்கத்திய பெண்வாதக் கொள்கைகளை பிற கலாச்சாரங்களில் கட்டாயமாக திணிப்பது போன்றவைகளும் நடக்கிறது ! இவை சில விமர்சனக் கோணங்கள் மட்டுமே. உண்மையான பெண்வாதம் என்பது பாலின சமத்துவம் மற்றும் அனைவருக்கும் உரிமை என்பதையே நோக்கமாகக் கொண்டது..

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...