வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

TALKS WITH NTB BLOG - #002


நல்லவர்களுக்கான பிரச்சினை என்று சமீபத்தில் ஒரு விஷயத்தை நம்மால் கேள்விப்பட முடிகிறது. இந்த பிரச்சனையை எப்படி நாம் விளக்கலாம் என்றால் ஒரு மனிதர் ஒரு அலுவலகத்தில் நல்ல மனிதராக இருந்தால் அவர்களின் தலையிலேயே அலுவலகத்தின் மொத்த வேலைகளையும் கட்டிவிட்டு மற்றவர்கள் அவர்களை வேலை வாங்க பார்ப்பார்கள்.  

சமூகத்தில் அவர்களுடைய உழைப்பை திருடி மற்றவர்கள் பணமாக மாற்றிக் கொள்வார்கள். நல்லவர்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்ற ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பதால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கிடைத்துவிட்டான் நமக்கு ஒரு அப்பாவி என்று அவர்களின் மனது கஷ்டப்படுகிறது என்று பொய் சொல்லி மற்றவர்களை வைத்து இதுதான் நிஜத்தில் நடக்கிறது என்று குற்ற உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களின் மூலமாக காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்.

இந்த மாதிரியாக இருப்பவர்கள் மற்றவர்களிடம் நமக்காக ஒரு நல்ல பெயர் இருந்தால் மற்றவர்கள் நம்மோடு அன்பு போகும் அக்கறையாகவும் இருப்பார்கள் என்று இந்த 2025 ஆம் ஆண்டில் கூட நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை NICE PEOPLE SYNDROME என்றும் கூட சொல்லலாம். 

சமீபத்தில் ஒரு இயக்குனர் கூட தளபதி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொன்ன வசனம் - உதவி செய்வதற்கு பணம் என்பதை எல்லோருக்கும் முக்கியமானது. இவை எல்லாம் வெறும் பணம் தான். அந்த உதவிக்கு எதுவுமே நிகராகாது என்ற வசனத்தின் மூலமாக இன்ஸ்பிரேஷன் ஆகி பிற்காலத்தில் நிறைய உதவிகளை செய்து பணத்தை இழந்ததும் சொல்லி இருக்கிறார். 

பணத்தின் காரணமாக பணத்துக்கு அதிகமான மதிப்பு கொடுக்காமல் இருந்ததால் பின்நாட்களில் பண கஷ்டத்தில் கஷ்டப்பட்டதை நினைவு கூர்ந்து ஒரு இன்டர்வியூவில் சொல்லியிருந்தார்.

அதாவது நல்ல மனிதராக இருந்தால் நீங்கள் நிறைய விஷயங்களை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து இழக்க வேண்டியதாக இருக்கும். 

இப்படி இழந்த விஷயங்கள் உங்களுக்கு திரும்பவும் கிடைக்காது என்பதால் முதலில் இருந்து நீங்கள் இந்த இழந்த விஷயங்களை பெற்றாலும் உங்களுடைய வயது அதிகமாக சென்றாலோ உங்களால் அதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது என் பதால் நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.




 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...