செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

இங்கே நிஜமாகவே நாடக காதல் என்று ஒன்று இருக்கிறதா ?




இன்றைய சாதி சம்மந்தப்பட்ட படங்கள் எடுப்பவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை “நாடகக் காதல்” 

இது மக்களை குழப்பும் அர்த்தத்தைக் கொண்டாலும், பொதுவாக இது சாதியை எடுக்கவேண்டும் என்று நினைக்கும் புது தலைமுறை இளைஞர்களுக்கு மனதை மாற்ற சொல்லும் மனத்தடங்கல் வார்த்தை

இவர்கள் சொல்வது என்னவென்றால் பணம் இருக்கும் மேல் ஜாதி மக்களை கல்யாணம் பண்ணுவது பணத்துக்காக வாய்ப்புக்காக மட்டும் நடக்கும் உறவுகளைக் குறிக்கும் விஷயம் என்றும் இந்த காதலை யாரும் அக்ஸேப்ட் பண்ண கூடாது என்றும் முட்டாள்தனமாக கருத்து சொல்கிறார்கள்

சாதியை விட்டு அன்பாக மக்களிடம் பழகி கிடைக்கும் உண்மையான அன்பு பொழுதுகளை நீக்கி, ஒருவர் மற்றொருவரிடம் பணம், பரிசு அல்லது ஏமாறுதல் பலன் பெற ஒரு நாடக நடிப்பைப் போலவே சாதி போற்றும் குடும்பங்கள் வாழ்வதை இப்போதே நாம் பார்க்கலாம் !

இந்த மாதிரி படங்கள் எடுப்பது சாதியை கொண்டாடும் காதல், சாதியை கொண்டாடும் பணிவு, சாதியை கொண்டாடும் பாசம் என்று காட்சிப்படுத்துவதே இதன் நோக்கம். 

இங்கே நிதி அல்லது பொருள் வளம் இல்லாமல் இருக்கும் போதே அந்த “காதல்” வேகமாக பறக்கிறது இதுதான் அனைத்தும் ஒரு நாடகமே என்று பொய் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் காதல் என்பது பணத்துக்கு அப்பாற்பட்டது 

இந்த மக்கள் சமத்துவம் வெளிச்சம் பார்க்கிறது நடக்காத காரியம்.  இன்றும் கூட இந்த சொல் கிராமப்புற சிறு ஊர்களின் குறிப்பாக நடக்கும் அடக்குமுறை போற்றும் பொய்க்கதைகள் மற்றும் பரபரப்பான சாதி பேச்சுவார்த்தைகளில் பரவலாகக் கேட்கப்படுவதான். 

இங்கே அம்பேத்கர் பசங்களாக வாழுங்கள் மக்களே , சமூகத்தில் சாதியை குப்பையில் போட்ட முதல் மாநிலம் தமிழ்நாடுதான் 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...