இந்த படத்துடைய கதை - க்லார்க் கென்ட் - ஏற்கனவே மெட்டா ஹியூமன்ஸ் என்று நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்கும் உலகத்தில் நிறைய சூப்பர் வில்லன்களும் இருக்கும் உலகத்தில் இந்த படம் இருப்பதால் இந்த படத்தில் இருக்கும் க்லார்க் கென்ட் - (சூப்பர்மேன்) - சென்ற படங்களை போல அதிசக்திவாய்ந்த மேன் ஆஃப் ஸ்டீல் என்ற லெவல்க்கு இரும்பு உடல் போன்று எல்லாம் இல்லாமல் - அதிக பலம் அதிக ஆற்றல் கொண்ட ஆனால் மனித தன்மை கொண்ட சராசரி சூப்பர் ஹீரோ பட்டியலில் இன்னொரு மக்களால் அறியப்படும் உலக அரசியல்வாதிகளால் வெறுக்கப்படும் ஒரு சராசரி சூப்பர் ஹீரோவாக இருக்கிறார்.
இப்போது பிரச்சனை எங்கே ஆரம்பிக்கறது என்றால் உலக நாடுகள் சந்தைகளில் மற்ற நாடுகள் தலையிடாது மற்ற நாட்டின் சூப்பர் ஹீரோக்களும் தலையிட மாட்டார்கள் என்னும்போது மக்களின் , குழந்தைகளின் பாதுகாப்புக்காக சூப்பர்மேன் தலையிட்டு பிரச்சனையை முடித்து எல்லோரையும் காப்பாற்றுகிறார் ஆனால் இதனை வைத்தே சூப்பர்மேனை ஒரு சதி வலைக்குள் சிக்க வைத்து சிறை கட்டிடத்தில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார் இவரை சுத்தமாக வெறுக்கும் உலக பணக்காரர் லேக்ஸ் லூதர் மற்றும் அவரக்கு துணையாக இருக்கும் ஒரு மோசமான அரசியல் பணத்தாசை அதிபர்.
சூப்பர்மேன் சிறைக்கட்டிடத்தில் இருந்து காப்பாற்றப்பாடுவாரா ? மக்கள் வரப்போகும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றப்பாடுவார்களா என்று கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பில்ட் அப்களை குறைத்து வேறு ஸ்டைல்லில் இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள். நடப்பு அரசியலை அப்படியே பேசி சிறுபான்மையினர் மற்றும் ஒத்துக்கப்படுவோரின் குரலாக ஒரு புரட்சிகரமான படமாக இது இருப்பதால் கட்டாயம் எல்லோருமே ஒரு முறை பாருங்கள். ஒரு கமேர்ஸியல் படம் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சம் பில்டப்களை லாஜீக் இல்லாமல் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை தவிர படமாக பார்க்க நன்றாக இருக்கிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக