வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #005



எந்த ஒரு திருமணமும் ஒரு கட்டத்தில் நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசக்கூடிய ஒரு தோழமையான அன்பான ஒரு உணர்வை கொடுக்கவில்லை என்றால் அதிகமான காலத்திற்கு நிலைக்காது. வெகுவான திருமணங்கள் மிகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்கக்கூடிய இருவருக்கிடையில் நடந்தாலும்.இவர்கள் இருவரும் எவ்வளவு திறன் மிக்க விஷயங்களாக அவர்களுடைய அலுவலக பணிகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அதிகமாக பேசிக் கொள்ளாமல் பழகிக் கொள்ளாமல் நிறைய இடங்களுக்கு செல்லாமல் ஒரு இருக்கமான தங்களின் வாழ்க்கை சார்ந்த ஒரு சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருந்தால்.அதிகமாக அவர்களால் இல்லற வாழ்க்கையில் வெற்றி அடைய இயலாது. திருமணம் செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தயவுசெய்து ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக் கொள்ளுங்கள். ஒரு இவர்கள் இருவரில் ஒருவரால் சரியாக பேச முடியவில்லை என்றாலும் இன்னொருவருடைய வாழ்க்கையே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.சரியான பேச்சுவார்த்தை பழக்கவழக்கம் என்பது இல்லாமல் போனால் எத்தகைய திருமண பந்தமும் சரியாக நிலைக்காது. இது காதலை கடந்த இன்னொரு விஷயம், காதலில் இருக்கக்கூடிய உணர்வுகளில் திருமணம் சார்ந்த உணர்வுகளை தாண்டி மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.எனவே திருமணம் என்று வரும்பொழுது ஒருவருக்கொருவர் பேசக்கூடிய, பழகக்கூடிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...