செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

நம்ம தமிழ் சினிமா கவனிக்க வேண்டிய ஒரு மனிதர் !

 


காலையரசன் ஹரிகிருஷ்ணன் தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்புத் திறனுடன் பிரசித்திபெற்றார். 2010-ம் ஆண்டு பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் உருவான இருந்தாலும் வெளியிடப்படாமல் போன ‘அர்ஜுனன் காதலி’ மூலம் அவர் அறிமுகமானார். 

பின்னர் மிஸ்கினின் ‘நந்தாலாலா’ (2010) மற்றும் ‘முகமூடி’ (2012) ஆகிய படங்களில், ரன்ஜித் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ (2012) மற்றும் ‘மதயானை கூட்டம்’ (2013) போன்ற படங்களில் சிறு காட்சிகளால்வும் அவர் திறனை வெளிப்படுத்திக் கொண்டார். 

2014-ம் ஆண்டு ரன்ஜித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் திரைப்பார்வையாளர்களின் மனதில் அடைக்கலம் போட்டார்; இப்படத்தின் வெற்றியும் வெகுவாக நடிப்பு திறனும் இவருக்கான கெரியரை முன்னணியில் இணைத்தன. அதன்பின் ‘கபாலி’ (2016), ‘டார்லிங் 2’ (2016), ‘ராஜா மந்திரி’ (2016) ஆகிய படங்களில் முன்னணி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து, 2017-இல் ‘அதே கண்கள்’ படத்தில் முன்னணித் திரைப்பட கதாநாயகராக அறிமுகமாகி, விமர்சகர்கள் இதனை மிகுதியாக பாராட்டின. 

குறிப்பாக சரபட்டா பரம்பரை படத்துக்கு எல்லாம் வெகு அதிகமாக முயற்சிகளை செய்து உடலை மேம்படுத்தி வலிமையான ஒரு குத்துச்சன்டை சாம்பியன் லெவல் பெர்ஃபார்மேன்ஸ் கொடுத்து இருப்பார் !

இருந்தாலுமே தானா சேர்ந்த கூட்டம் - படம் உட்பட நமது கதாநாயகர் நிறைய பொடன்ஷியல் இருக்கும் நடிப்பு திறன் கொண்டவராக இருந்தாலும் தகுந்த கேரக்ட்டர்கள் கொடுக்கப்படவில்லை என்பதுதான் இந்த வலைப்பூ சார்பாக சொல்லப்படும் கருத்து. கட்சி சேர பாட்டின் பாடகர் - தளபதி மகன் - போல பணக்கார குழந்தைகளையும் இன்ஸ்ட்டாகிராமின் ப்ரைவேட் சப்ஸ்க்ரிப்ஸன் போடும் ஆட்களையும் வளர்த்திவிடும் நம் மக்கள் இப்போது திறைமையால் முன்னேறும் நாம் இளைஞர்களை இன்ஸ்பிரேஷன் என்று எடுத்துக்கொள்ள மறுப்பது தமிழ் மக்களின் மிகப்பெரிய மரண மிஸ்டேக் என்பதை இந்த வலைப்பூவின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் !

1 கருத்து:

லியோ தாஸ் சொன்னது…

மனுஷன் பாவம் , சூப்பர் ஹிட் படம் கிடைக்கறது இல்ல

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...