புதன், 30 ஜூலை, 2025

MUTHA MAZHAI INGU KOTTI THEERADHO (CHINMAYI VERSION LYRICS) - INNUM VARUM ENDHAN KADHAI - TAMIL SONG LYRICS - தமிழ் பாடல் வரிகள் -




முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
டனு டம் மரு தம் தம் ! இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ ? சொல்லா உறவோ ?
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ ?

கண்ணாளா என்னாலா ? பெண்ணாலா ?
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை

ஹா..

என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை

கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
கரு மை கண்ட கண் நோக்கி
பொய் சொல்லி நின்றாயா ?
போதும் போதும் என சென்றாயா ?

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ ?

முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ !

டனு டம் மரு தம் தம் !
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ ? சொல்லா உறவோ ?
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்

ஒர் பாலை நிலத்தினில் சோலை நிழலென
காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில் கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்

நான் காதலி - காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே !
அந்தக் காலன் வந்தால் வெல்வேனே

வரும் ஒரு சூரியன் பல தாரகை 
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ ?

இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா

ட்யனு டம் மரு தம் தம் !
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ

கண்ணாளா என்னாலா ? பெண்ணாலா ?
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...