புதன், 30 ஜூலை, 2025

GENERAL TALKS - ஸ்மார்ட் வாட்ச் வளர்ச்சியும் வீழ்ச்சியும்




காசு இருக்கிறது என்று காட்டுவதற்காகவே நம்மால் அணியக்கூடிய சாதனங்களில் ஒன்று ஸ்மார்ட் வாட்ச். இது ஒரு சாதாரண கடிகாரம் போல இல்லாமல், நம்முடைய உடல் நிலையை, போனில் வரும் மெசேஜ்களையும், அழைப்புகளையும் கூட காட்டக்கூடிய சிறப்பான கடிகாரம். முதலில் வெளிவந்த காலத்தில் ஸ்மார்ட் வாட்ச் என்பது ஒரு புதுமையான கரன்டில் வேலை பார்க்கும் கடிகாரம். இது நம்முடைய கைப்பேசிக்கு இணைந்து செயல்படுகிறது. இவைகள் துல்லியமாக நம்முடைய நடை, ஓட்டம், இதயத் துடிப்பு போன்றவற்றை கணக்கிடும். இதை ஆப்பிள் , சாம்ஸங் போன்ற பெரிய நிறுவனங்கள் உருவாக்கின. ஒரு காலத்தில் எல்லோரும் இவற்றைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தனர். ஸ்மார்ட் வாட்ச் அணிவது ஒரு ஸ்பெஷல் விஷயமாக இருந்தது. அந்த எழுச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. சில காரணங்களால் மக்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதை நிறுத்த ஆரம்பித்தார்கள். விலை அதிகம் – ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க மிகவும் அதிக பணம் வேண்டும். தினுசான சில கரண்ட் வாட்ச்கள் ஒரு மொபைல் போனுக்கு சமமாக இருந்தன! மேலும் இவைகளை ஒவ்வொரு நாளும் சார்ஜ் செய்ய வேண்டியது எல்லோருக்கும் பிடிக்கவில்லை. வெளிவந்த நாளில் இருந்து இப்போது வரை எந்த புதுமையும் ஸ்மார்ட் வாட்ச் பக்கம் இருந்ததே இல்லை – புது மாடல்கள் வந்தாலும், அவற்றில் பெரிதாக வேறுபாடு தெரியவில்லை. மொபைல் போன் போதும் – நாம் பெரும்பாலும் போனிலேயே திறந்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்துவிடுகிறோம். இதுக்காக வாட்ச் கட்டி அதையே மீண்டும் பார்ப்பது சிலருக்குப் பிடிக்கவில்ல இப்போது ஸ்மார்ட் வாட்ச்கள் எல்லாம் ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய சாதனம் இல்லை. ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்பும் பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்தவர்கள் ஆகியோர் இதைப் பயன்படுத்துகிறார்கள். 1000 - 3000 வரை பட்ஜெட்டில் சேல்ஸ் ஆகும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு என்று இன்னும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கதான் செய்கிறது !!

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...