வியாழன், 24 ஜூலை, 2025

GENERAL TALKS - தொலைநோக்கு பார்வையாக செயல்படவேண்டிய கட்டாயம் !

 


ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள். எலிக்கு தன்னை சுத்தி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி. இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுத்தி ஜாடியில் உள்ள தானியத்தை உண்டது. நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது. எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியாது. இனி தினம் யாராவது தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான். அப்படியே யாராவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியதை, வேண்டும் என்பதை சாப்பிட முடியாது. இந்த கதையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள். 

(1) அலுவலகத்தில் உங்களை எந்த வேலையும் கொடுக்காமல் வைத்திருப்பதும் உங்களை அழிப்பதற்கு தான். 

(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும். 

(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறி ஆனால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும். 

(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...