திங்கள், 28 ஜூலை, 2025

GENERAL TALKS - ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும் !





நகை கடையில் புதிதாக வேலை சேர்ந்த அந்த பையனை பார்த்து சேர்ந்த உடனே எனது நடவடிக்கையை கவனித்து எனது குருநாதர் சொன்னார். வேலையில் வித்தைகாரணாக இருந்து அஞ்சு பைசாவுக்கு உபயோகம் இருக்காது தம்பி. பணம் சம்பாதிக்க தெரியனும். எடுத்த வேலையை உடனே முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு அடுத்த நொடியே போகத் தெரியனும். அப்போதுதான் நீ கற்ற வித்தைக்கு பயன் உண்டு என்றார். ஆனால் அந்த பையன் புதுசு புதுசா வேலையில் ஒவ்வொன்றாக கற்கிறேன் என்று. தங்கத்திலேயே கைவினைப் பொருட்கள் செய்வது, கோயில் வேலைகள் செய்வது, நகாசு வேலைகள் செய்வது, எனாமல் வேலைகள் செய்வது என்று மாறி மாறி. திடீரென்று கண்ணாடி பிரேம் செய்வது, வாட்ச்சேஸ் செய்வது, சட்டை பித்தான்கள் செய்வது, திடீரென்று யாராவது ஒருவரின் புகைப்படம் கிடைத்தால் பிரேம் செய்து தருவது என்று செய்து கொண்டிருந்தான்! அதன் விளைவாக ஆயிரம் ரூபாய் வருமானம் வர நான்கு ஐந்து, சில நேரங்களில் 15 நாட்கள் என்று நேர விரையம் செய்வது. என்று ஆகிவிட்டான்! அதன் விளைவு வருமானம் என்பது 0,0,0,0,0, என்றானது! முடிவில் கடன்கள் பெருகி. கப்பலே கவிழ்ந்தது போல் ஆனான்! அதனால் மன கவலை, சோர்வு, எல்லாம் சேர்ந்து உடல் நிலையை பாதித்து கைகள் நடுக்கம் ஏற்பட்டு தெரிந்து கொண்ட வேலையை கூட செய்ய முடியாமல் ஆனது! அதன் விளைவு.? நினைச்ச ஊருக்கு போகணும் என்றால் பல ஊரை தாண்டித்தான் ஆகணும் என்பதைப் போல பல வேலைகளுக்கு சென்று. இன்று உணவு தயாரிப்புக்கு வந்து விட்டான்! குருநாதர் சொன்னதைப் போல. ஒரு தொழிலை செய்! உருப்படியாய் செய்! என்று இருந்திருந்தால்.? இன்று இருக்கின்ற நிலையை விட இன்னும் சிறப்பாக இருந்திருக்கத்தான் செய்வேன்! என்று மனதில் எண்ணிக் கொண்டான். அவன் முன்னேற விடாமல் செய்தது எது? மெத்தப் படித்த அறிவு கால் காசுக்கு ஆகாது

1 கருத்து:

Sivaguru 💖 சொன்னது…

நெட்பிலிக்ஸில் 'ஷி' என்றொரு வெப் சீரிஸ் பார்க்க நேரிட்டது. கொஞ்சம் மேட்டர் அதிகமுள்ள த்ரில்லர். அதில் ஒரு அட்டகாசமான காட்சி வைத்திருந்தார் டைரக்டர்.
கதைப்படி நாயகி ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். மெலிந்த உடல்வாகு கொண்ட திருமணமான பெண் அவள். ஒரு அம்மாவையும், ஒரு தங்கையையும் அவள் வருமானம் தான் காப்பாற்றுகிறது. அவளை அவள் கணவன் ஒதுக்கி வைத்து விடுவான். திருமணமாகி முதலிரவிலேயே அவளை அடித்து "நீ பெண்ணே கிடையாது.நீ ஒரு ஆண்"என சொல்லி ஒதுங்கிவிடுவான். இவளும் டைவர்ஸ்க்கு போய் விடுவாள். இவள் கணவன் இவள் தங்கைக்கு ரூட் விடுவான். தங்கையை சந்திக்க தினம் அவள் காதலன் வருவான். ஒரு கட்டத்தில் தான் ஒரு பெண்தானா என அவளுக்கே ஒரு சந்தேகம் வந்துவிடும். எந்த ஆணும் அவளை பார்ப்பதில்லை. ஏக்கப்பெருமூச்சு விடுவதில்லை.கண்ணாடியின் முன் நின்று முன் பாகங்களை பார்த்து வெறுப்படைகிறாள். ஒரு காட்சியில் ஒரு ஹோட்டலில் இரவு நேரத்தில் உட்கார்ந்து சக போலீஸ் கான்ஸ்டபிளோடு போனில் பேசிக்கொண்டே இருக்கும் போது தான் கவனிக்கிறாள்.அந்த சர்வர் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை. "ஏய்...இங்கேவா...என்னை பார்த்தாயா?" எனக்கேட்க..அவன்.."மேடம்..நான் சர்வர். உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு தான் பார்த்தேன். அது என் வேலை" என்கிறான். "இங்கே எங்கே டாய்லேட் இருக்கிறது?" அவன் பின் பக்கம் கை காட்ட அங்கே போகும் அவனை கண்காட்டி அழைக்கிறாள்.அவனும் நெருங்கிவர இவளும் அவன் முகத்துக்கு அருகே சென்று மேலே கைவைக்கசொல்கிறாள்."ஏதாவது ஆகிறதா உனக்கு?" சடாரென அவள் ஒரு காரியம் செய்து புரிந்து கொள்கிறாள். சட்டென அவனை விட்டு விலகி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெற்றிப்புன்னகையோடு வெளி வருகிறாள். ஆம்...நான் பெண் தான்.என் பெண்மை ஒருவனை துள்ள வைத்திருக்கிறது என்கிற உவகையோடு அவள் சாலையில் நடந்து வருகிறாள்.காட்சியாக சொல்லும் போது விரசமாகத்தோன்றினாலும் பெண்ணின் மனம் ஒரு வயதுக்கு மேல் தான் பெண் தான் என ஆண்களால் தான் உணரவைக்கப்படுகிறது போலும். நான் பெண் தான், பெண் தான் என்கிற அவளின் அந்த ஹோட்டல் சம்பவம் தான் கதைப்படி அவள் வேலையில் மிகப்பெரிய கேங்ஸ்டரை பிடிக்கும் அளவுக்கு பெரிய செயல்களை செய்யும் அளவுக்கு வளர்த்து விடுகிறது.

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...