ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார். மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித் தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்த அந்த வடநாட்டுப் பேர்வழி தான் எடுத்து இருப்பான் என்று அவர் நினைத்தார். அவனுக்குத் தமிழ் தெரியாது. அவன் பேசியது அவருக்குப் புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து விட்டார். இதைக் கவனித்து விட்டு இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்தார். அவசரப்படாதீர்கள் நான் விசாரிக்கிறேன்" என்றார். துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே அந்த வடநாட்டு ஆசாமி மிகவும் பயந்து, பணத்தை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து இருப்பதாகக் கூறினான். பூமிக்கடியில்” என்பதை சைகையிலும் காண்பித்தான். பணத்தைத் திருட்டு கொடுத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை, பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி, "என் தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித் தர முடியாது என்கிறானா?" என்று கேட்டார், பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கும் அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. ஆனாலும் அவர் ஆமாம்” அப்படித் தான் சொல்கிறான் என்றார். இப்படித்தான் யார் என்ன சொன்னாலும் உண்மை அறியாமல் மற்றவர்கள் மீது தவறான எண்ணம் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமாகவே ஏதோ கற்பனை செய்து கொள்கிறோம். நாம் எண்ணுவது தான் உண்மை என்று சொல்லி சாதிக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக