செவ்வாய், 22 ஜூலை, 2025

ARC-G2-037


ஒரு மன்னருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும். ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார். இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, ”என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்!“ என்று கூறியது. இதனைக் கேட்ட மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம், “என்ன புறாவே. இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே. எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார். அதற்கு அந்த ஆண்புறா, ”மன்னரே. என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது. “மன்னர் கூப்பிட்டாரே. எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது. “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படி யெல்லாம் செய்தவிடாதே என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“என்றதாம் ஆண்புறா. புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா பயம் !





 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Power of Wifey 🔥

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...