ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

GENERAL TALKS - ஒரு டிஜிட்டல் உலகம்


ஒவ்வொரு நாளுமே அதிகமாக வளர்ந்து கொண்டு இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய மனிதப் பரிமாணத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்று சர்வாதிகார ஆட்களின் ஒரு கடினமான ஆட்சி அமைப்பை உருவாக்க காரணமாகிவிடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

இவர்களுக்கான கால நேரங்கள் சரியானதாக அமைவதாக இப்பொழுதுப்படுகிறது. காரணம் என்னவென்றால் மருத்துவத்துறையில் கூட ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் உள்ளே நுழைந்ததால் ஸ்கேனிங் தரப்பில் மேனுவலாக மனிதர்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆட்டோமேட்டிக்காக இயந்திரமே சம்பந்தப்பட்ட விஷயங்களின் ஸ்கேன் நோய்களை கண்டறிந்து சொல்லிவிடும் என்று ஸ்கேன்களுக்கு மனிதர்கள் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வைத்துவிட்டது அல்லவா ?

ஒரு குறிப்பிடத்தக்க துறையே எடுத்து விடும் அளவுக்கு ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இன் முழு அளவிலான வளர்ச்சி அமைந்துள்ளது. இப்படி ஒரு துறை காணாமல் போவது பெரிய விஷயமாக.இப்பொழுது நீங்கள் கருதாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு துறையும் இதேபோன்று காணாமல் போய் விட்டால் வாழ்க்கை என்ன ஆகும்?

மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில் கண்காணிக்கப்பட்ட ஒரு ட்ரோன் தானாகவே மனித உருவம் கொண்ட  ஒரு பொம்மையை குறிவைத்து லேசர் புள்ளி அமைந்திருந்த நெற்றியில் நேரடியாகத் தாக்கியது.

இந்த மாதிரி இயந்திரங்களை பயன்படுத்தும் காலச்சரத்தை மட்டும் வளர்த்துக் கொண்டு சென்றால் இயந்திரங்களின் மூலமாக அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள்  சராசரியான எளிமைமிக்க மனிதர்களை சுத்தமாக மதிக்க மாட்டார்கள். 

காரணம் என்னவென்றால் நல்ல மனிதர்கள் எப்பொழுதுமே ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக நல்லவர்கள் நல்ல மனம் உள்ளவர்கள் மற்றவர்களை இணைந்து வேலை பார்க்க நினைப்பார்கள். ஆனால் இயந்திரங்கள் இயந்திரங்களே கட்டுப்படுத்தவர்கள் இணைந்து வேலை பார்ப்பதில்லை.

இந்த பன்னக்கார சர்வாதிகார ஆட்கள் மனிதநேயத்தில் எல்லாம் நாட்டம் இருப்பவர்களாக இருப்பதில்லை. சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில் மட்டுமே நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்களுடைய சிறுவயதிலிருந்து அவர்களுக்கு கிடைத்துள்ள பணமும் பொருளும் என்று சந்தோஷம் கொடுக்கும் எல்லா விஷயங்களும் அவருக்கு கிடைத்துள்ள பணக்காரர்களுடைய நட்பு கூட்டு சந்தோஷமும் பிற்காலத்தில் தங்களுடைய தலைமுறைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடினத்தன்மையை காட்ட நினைப்பார்கள். 

ஆனால் இந்த வகையான விஷயங்களில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்ன் சக்தி இதுபோன்ற சர்வாதிகாரம் மிக்க ஆட்களுக்கு கிடைத்தால் என்னதான் நடக்கும் என்பது நினைத்துப்பார்க்க இயலாத ஒரு படு பயங்கரமான கற்பனையாகத்தான் இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...