படம் ஆரம்பத்தில் இருந்தே முந்தைய படத்தின் உயர்தரமான ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. சென்ற படத்துக்கு பின்னால் ஹட்ச் அவருடைய குடும்பத்துடன் அதிகமாக நேரம் செலவு செய்ய இயலாமல் பணியின் காரணமாக நாட்டில் இருக்கும் மோசமான குற்ற அமைப்புகளை அடித்து நொறுக்குவதையே அதிக நேர வேலையாக வைத்து இருக்கிறார். இதனால் அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் கொஞ்சமாக வருத்தத்தில் இருக்கவே லீவு போட்டுவிட்டு ஒரு பிரேக் எடுத்து அவருக்கு பிடித்தமான ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்குக்கு குடும்பத்துடன் விடுமுறை சுற்றுலா செல்கிறார் ஆனால் அங்கே நடந்த ஒரு தகராறு பெரிய அளவில் பிரச்சனையை கொண்டுவந்து ஒரு பெரிய கொலைகார கும்பலுக்கும் அவருக்கும் மோதல் உருவாகவே எப்படி குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார் என்று சுவாரசியமாக சென்ற படத்தை போலவே நிறைய சண்டை காட்சிகளோடு படத்தை எடுத்து பிரமாதப்படுத்தி இருப்பதால் கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். குறிப்பாக ஜான் விக் படங்களை நீங்கள் மிஸ் பண்ணுவதால் கொஞ்சம் ஃபேமிலி - காதல் - அட்வேன்சர் கலந்த இந்த படம் ஒரு சரியான பொழுதுபோக்கு அம்சமாக இருந்துள்ளது என்பது ஆச்சரியம் இல்லை.
1 கருத்து:
சூப்பட் படம்.
கருத்துரையிடுக