இங்கே நிறைய பேருடைய அனுபவத்தோடு இந்த வலைப்பூவில் என்னுடைய அனுபவத்திலும் சொல்கிறேன், நல்லவராக இருக்க வேண்டாம், எல்லாமே வேஸ்ட் ஆகிவிடும், எல்லவற்றையும் இழந்து நிற்பீர்கள், இன்னும் சொல்லவேண்டும் என்றால் நல்லவனாக இருந்தால் வெற்றி அடைய தகுதியற்ற மனிதர் நீங்கள் என்று சொல்லலாம், நம்முடைய தமிழ்நாட்டில் 7 கோடி பேர் இருக்கிறார்கள், இந்தியாவில் 130 , உலகத்தில் 880 - இவர்களில் யாருமே நல்லவர்கள் கிடையாது, தற்காலிகமாக 5 நிமிடம் அல்லது 1 மணி நேரம் நல்லவர்களாக இருக்கலாம் ஆனால் போட்டியை சமாளிக்க கெட்டவர்களாகத்தான் இந்த உலகத்தில் வாழ வேண்டும். சக்திவாய்ந்த மனிதர்களில் யாருமே நல்லவர்களாக இருக்க முடியாது. ஒரு அடி வாங்கினால் இன்னொரு அடியை அடித்தவனுக்கு கொடுக்க வேண்டும் என்பது வாழ்க்கையின் கட்டாய நிபந்தனை, நண்பர்கள் சில நேரங்களில் எதிரிகளாக மாறுவார்கள், உங்கள் எதிர்கால திட்டங்கள் சாத்தியமானது என்றால் பொறாமை இவர்களுக்கு பொங்கி எழத்தான் செய்யும். தேவைக்கு அதிகமாக பேசவும் கூடாது. தேவையான அளவுக்குதான் பேச வேண்டும், வெகுவான அன்பு நீங்கள் யாரோடு திறந்த மனதோடு பழக்குகிறீர்களோ அவர்களிடம் இருந்து கிடைக்கும் ஆனால் எல்லோரோடும் திறந்த மனதோடு பழகினால் பக்ல் கொள்ளையாக உங்களுடைய பணத்தை இழப்பீர்கள் ! வாழ்க்கை சொல்வது என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக