புதன், 13 நவம்பர், 2024

MUSIC TALKS - VAANAM MELLA KEEL IRANGI MANNIL VANDHAADUTHE - THOORAL THANDHA VAASAM ENGUM VEESUDHINGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




வானம் மெல்ல கீழறங்கி 
மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் 
எங்கும் வீசுதிங்கே

வாசம் சொன்ன பாஷை 
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் 
வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே 
வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு 
உயிரிலே இணையும் 
தருணம் தருணம்

வானம் மெல்ல கீழறங்கி 
மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் 
எங்கும் வீசுதிங்கே

வாசம் சொன்ன பாஷை 
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் 
வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது 
அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே 
உள்ளம் துள்ளி ஓடி நீ 
வந்து போன காலடி

கேட்காமல் கேட்பதென்ன 
உன் வார்த்தை உன் பார்வை தானே
 என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன 
நீ பேசி நான் கேட்க வேண்டும்
இங்கேய என் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்து காவல் காப்பேனே


பாதி வயதிலே தொலைந்த 
கதைகள் தோன்றுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் 
நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை 
உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே
நில்லாமல் ஓடி ஓடி 
நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்
உன்னை பார்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் 
உன்னை பார்க்க இந்த கண்கள் 
போதாதே


1 கருத்து:

Sivaguru 💖 சொன்னது…

இளையராஜா மாதிரி உலகத்துலயே ஆள் கிடையாது... அது ஏன்னு தெரியுமா? தயாரிப்பாளர் சொன்னதைப் பாருங்க..

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவுக்குள் அன்னக்கிளி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் போட்ட பல பாடல்கள் காலத்தால் அழியாதவை. 80ஸ் குட்டீஸ் முதல் 2கே குட்டீஸ் வரை அவரது பாடல்களை ரசித்துக் கேட்கின்றனர். அந்தளவுக்கு அவர் இசை சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

இப்போதும் அவர் தமிழகம் எங்கும் பல இடங்களில் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார். இவரைப் பற்றியும், தமிழ்த்திரை உலகம் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க...

லோகேஷ் கனகராஜ் கூலி படம் பண்ணும்போது அமீர்கான் அந்தப் படத்தை சிலாகிச்சிப் பேசுறாரு. அவருக்கும் அடுத்த படத்தை லோகேஷ் பண்ணப் போறதா சொல்றாங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி என்ன சொல்றாருன்னு பாருங்க.

தமிழ்த்திரை உலகில் நிறைய டேலன்டட் டைரக்டர்ஸ் இருந்துருக்காங்க. உதாரணத்துக்கு இளையராஜாவை மாதிரி இசை அமைப்பாளர் எந்த இன்டஸ்ட்ரியிலுமே கிடையாது. எங்கே தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. உலகத்துல தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. அத்தனை வெரைட்டீஸ்களை இளையராஜா கொடுத்துருக்காரு.

அதுக்கு அப்புறம் ஏஆர்.ரகுமான். ஆஸ்கர் விருது வாங்குற அளவுக்குப் பேரு பெற்ற இசை அமைப்பாளரா வந்தாரு. அவரும் தமிழ்த்திரை உலகில் இருந்து வந்தவருதான். தமிழ்த்திரை உலகம் அதன் படைப்புகளிலும் என்னைக்குமே தரமாகத் தான் இருந்துருக்கு.

மசாலா படங்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் வரத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. சாமி படங்கள், பேய் படங்கள்னு வேற வேற ஜானர்ல வரத்தான் செய்யும். ஆனா அந்தப் படங்களோட குவாலிட்டி, அதுல உள்ள நேர்த்தி, டெக்னிக்கல் அட்வான்ஸ்டுன்னு பார்த்தா தமிழ்த்திரை உலகத்துல நிறைய பேர் இருந்துருப்பாங்க என்கிறார் பாலாஜி பிரபு.

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...