வியாழன், 7 நவம்பர், 2024

MUSIC TALKS - MIDHANTHU MIDHANTHU VANDHAAI - NENJIL NADANTHU NADANTHU SENDRAAI - ASANDHU ASANDHU NINDREN - AIYO ALANDHU ALANDHU KONDARAAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நான் 
இனி காற்றில் 
நடக்க போகிறேன்
கூடவே 
உன் கைகள் 
கோர்த்து கொள்கிறேன்

இந்த பிரபஞ்சம் தாண்டியே 
ஒரு பயணம் போகலாம்
அதில் மூச்சு கூட தேவை இல்லை 
முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்
மிதந்து, மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன்
ஐயோ அளந்து, அளந்து கொன்றாய்
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன்
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் 
தூசி போல படிகிறேன் மடிகிறேன்

மெல்லிய சாரலும் 
மஞ்சளாய் வெயிலும் 
சேர்ந்தது போல்
உந்தன் வெட்கமும் 
கோபமும் சேர்ந்ததடி

தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி
காதலும் இல்லாத
காமமும் இல்லாத 
ஓர் நொடி ஓர் நொடி

பார், 
சுற்றி பார் 
நம்மை போல் 
இனி யாரடா 
காதலிப்பார்

நீ 
எந்தன் புத்தகம் 
மெல்லிசை புல்நுனி 
தேய்பிறை யாவிலும் நீயே
கட்டிலும் நீ கோவிலும் நீ
தாய் மடி ஆகிடும் 
தோழியும் நான் தானே
பாரதி போல் ஆனேன், 
பைத்தியம் போல் ஆனேன் 
உன்னால் நானே

மிதந்து, மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து, நடந்து சென்றாய்
அசந்து, அசந்து நின்றேன்
ஐயோ நெளிந்து, 
வளைந்து கொன்றாய்
உன் கூந்தல் இருட்டிலே 
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன் 
நான் தொலைந்து போகிறேன்
ஒரு ஜாடை செய்யடி 
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் 
தூசி போல படிகிறேன் 
மடிகிறேன்

அந்தி மழையில் 
பச்சை தளிர்கள் நனைத்த வாசம்

உந்தன் உடலில் 
சில பகுதி அதிலே வீசும்

எந்தன் இறுதி மூச்சு 
முடிந்து கண்கள் 
மூடும் தருணமே
உனது உருவம் காட்டுமே 
உன்னோட நினைவு நான்

காற்றில் மிதக்கும் இசை போல்
உந்தன் காதில் நுழைந்து கொள்வேன்
காட்டில் கிடக்கும் இலை போல்
என் கூந்தல் கலைத்து செல்வாய்
இந்த பூமி போதுமா 
இந்த பூமி போதுமா
இன்னும் வேறு வேண்டுமா 
இன்னும் வேறு வேண்டுமா
நீ பார்த்த பார்வைகள் 
நீ பார்த்த பார்வைகள்
அது காலவெளியில் 
காற்று போல கலக்குமே, மிதக்குமே


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...