வெள்ளி, 4 அக்டோபர், 2024

MUSIC TALKS - SEMPOOVE POOVE UN MEGAM NAAN VANDHAAL ORU VAZHI UNDOW - SAAINDHAADUM SANGIL THULI PATTALUM MUTHAAGIDUM MUTHUNDE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
படைகொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஓஹோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ
இமைகள் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக 
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம்தொட்டு 
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் 
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா ?
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ 
கை வளை கைகளை கீறியதோ

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று 
காத்திருக்கு உள்ளம் நொந்து 
கண்கள் என்னும் தூண்டில் 
தும்பி பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு 
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணைபுதையல் ரகசியமே
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ




கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...