வியாழன், 3 அக்டோபர், 2024

CINEMA TALKS - BLINDSPOTTING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இங்கே இன்டர்னேஷனல் சினிமா பார்க்கும்போது பெரும்பாலான நேரங்களில் சினிமா என்பது மக்களுக்கு ஒரு கருத்தை சொல்லக்கூடிய கருவியாக இருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த படம் கண்டிப்பாக இன்டர் நேஷனல் சினிமாவால் கவனிக்க வேண்டிய ஒரு படம். கறுப்பு இன மக்கள் மீது இருக்கும் வெறுப்பால் வெள்ளை நிற காவல்துறை அதிகாரியால் சுட்டு கொல்லப்படுகிறார் ஒரு அப்பாவி கருப்பு இளைஞர். இந்த கொலையை நேரில் பார்த்தாலும் சாட்சி சொல்லாமல் பயந்து செல்கிறார் நம்முடைய கதாநாயகர். ஒரு ஒரு நாளும் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்தவே சோகத்தை உள்ளே மறைத்து நன்பரோடு நகர்வலமாக வாழ்க்கையை நடத்த அவருக்கு ஒரு காரணம் உள்ளது. தெரு சண்டை வழக்கில் ஒரு நபரை கோபமாக அடித்ததால் கொலை முயற்சியாக வழக்கு பதிவு பண்ணப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இருப்பதால் கண்டிப்பாக இன்னொரு வம்பில் சிக்கினால் வாழ்நாள் முழுதும் சிறையில் முடிந்துவிடும் என்பதால்தான் சாட்சி சொல்லவில்லை. அடுத்த சில வாரங்களுக்கு அவருடைய வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களும் அதனால் உருவாகும் மன மாற்றமும் என்று படம் சுறுசுறுப்பாக திரைக்கதை கொடுத்து யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்துவிடுகிறது. கிளைமாக்ஸ்ஸில் ஒரு நல்ல மெசேஜ் நமக்கு கிடைக்கிறது. நிறவெறியாளர்களின் இனவெறி எப்படி சராசரி மனிதர்களை பாதிக்கிறது என்று மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை இயல்பாக கொஞ்சம் நகைச்சுவையாக படத்தை நகர்த்தி இருப்பது சுவாரசியமான விஷயம். இது போன்று படங்களை அதிகம் பார்க்க முடியாது.

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...