ஞாயிறு, 6 அக்டோபர், 2024

CINEMA TALKS - KANTARA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




காடுகளிலும் காடுகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு எப்போதுமே நம்மால் தவிர்க்கப்பட்டே வருவதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் என்னதான் முயற்சிகளை பண்ணி இருந்தாலும் பணக்காரர்களின் பணத்தாசைக்கும் அரசாங்க செயல்பாடுகளுக்கும் மலைவாழ் கிராமங்களுடையை விதியானது மாற்றப்படுகிறது. இந்த வகையில் ஜிகர்தன்டா டபுல் எக்ஸ் படத்துக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றே இந்த படம் அமைந்து இருக்கலாம். கதை என்னவோ சிம்பிள் கிராமத்து ரேவென்ஜ் கதைதான். ஒரு காலத்தில் ராஜாவிடம் இருந்து தானமாக வாங்கி அந்த காடுகளை ஆளும் காவல் தெய்வம் கொடுத்த நிலத்தை பின்னாட்களில் ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கிறார் அந்த அரசரின் வம்சம் வந்த பணக்கார முதலாளி. இன்னொரு பக்கம் அரசாங்க அடிப்படையில் காடுகளை பாதுகாக்க நினைக்கும் ஒரு கோபம் நிறைந்த அதிகாரியாக ஒரு கதாப்பத்திரம். இவர்களுக்கு நடுவே பகடை காயாக மாட்டிக்கொள்ளும் ஒரு துணிவான இளைஞரும் அவருடைய குழுவின் முயற்சிகளும் அவருக்கு சப்போர்ட் பண்ணும் காவல் தெய்வமும் என்று கமேர்ஷியல் படமாக வெளிவந்த இந்த கான்டாரா ஒரு நல்ல மெசேஜ் சொல்லிவிட்டு கிளைமாக்ஸ்ஸில் சிறப்பாக முடிவுக்கு வருகிறது. காமிரா வோர்க் மற்றும் திரைக்கதைதான் அடுத்து என்ன நடக்கும் என்ற ஸஸ்பென்ஸ்ஸை ஆடியன்ஸ்க்கு கொடுத்து சிறப்பான பிரேசண்டேஷன் என்று இந்த படத்தை வழங்கி இருக்கிறது. குறைவான பட்ஜெட்தான் என்றாலும் நடிகர்கள் ரீஷப் ஷேட்டி , கிஷோர் . அனுராக் , சப்தமி என்று எல்லோரும் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் நடிப்பு கொடுத்து இந்த படத்தை கண்டிப்பாக நல்ல ப்ரொடக்ஷன்னாக மாற்றி இருக்கிறார்கள். இதுதான் இந்த படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால் இன்னொரு பிளஸ் பாயிண்ட் இந்த படம் நடக்கும் காலகட்டத்துக்கு ஏற்ற ரிசர்ச் இந்த படத்தின் திரைக்கதையை மெருக்கேற்றம் செய்து இருப்பதுதான். மொத்ததில் இந்த படம் தரமான படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...