வியாழன், 24 அக்டோபர், 2024

GENERAL TALKS - X MEN - THE LAST STAND - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


இந்த படம் நேரடியான எக்ஸ் மென் படங்களின் வரிசைக்கு ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி எடுத்ததாலோ என்னவோ கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மென்ட்தான் இருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது. X MEN - UNITED படத்தில் உயிர் தியாகம் செய்த ஜீன் க்ரேவுக்கு அந்நியன் படம் போல இன்னொரு அரக்கத்தனமாக இருக்கும் பெர்ஸனாலிட்டிதான் ஃப்யூனிக்ஸ் - இந்த கேரக்ட்டர் தொடக்கத்திலேயே தன்னுடைய காதலனை காலி பண்ணிவிடுகிறது. கோபமாக அலைகிறது இன்னொரு பக்கம் மேக்னட்டோ அவருடைய அமைப்புக்கு வரமாட்டோம் வரமாட்டோம் என்று சொல்லும் மியூட்டன்ட்களை வலுக்கட்டாயமாக சேர்த்து கடைசியாக ஒரு படையை உருவாக்கி பெரிய சண்டையை போட முயற்சிக்கிறார். இந்த ஆபத்தான அணிவகுப்பில் ஜீன் க்ரேயும் இணைந்து மியூட்டட்களை நிரந்தரமாக மனிதர்களாக மாற்றும் ப்ராஜக்ட்டை உருவாக்கிய அனைவரையும் மேலோகம் அனுப்ப முயற்சிக்கும்போது மிஞ்சிய எக்ஸ்மென் குழுவின் ஹீரோக்கள் எப்படி எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை ! இந்த படம் நல்ல நடிப்பு திறனுக்காக வோர்த்தான படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். இந்த படத்தின் சம்பவங்கள் எல்லாமே X-MEN - டேஸ் ஆஃப் ஃப்யூச்சர் பாஸ்ட் என்ற படத்தில் டெலீட் பண்ணப்பட்டு புதிய டைம்லைன்னில் கொண்டுவரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...