வெள்ளி, 4 அக்டோபர், 2024

GENERAL TALKS - உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னாலும் !




இந்த கதை நான் சமீபத்தில் படித்த ஒரு கதை. ஒரு நல்ல மனமுள்ள அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான் அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், “இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது” என்றான். துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,“ என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக் கொள்ளலாம்” என்றான்.
 இங்கே அதிகாரிகளுக்கு ஒரு சிறிய சோதனை வைத்தார் துறவி. “அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஒரு மிகப்பெரிய பாத்திரம்  வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும், “ என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், “இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான். பின் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த  மிகப்பெரிய பாத்திரம் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது  மிகப்பெரிய பாத்திரம் நிறையத் தண்ணீர் தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத் தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?” என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என தெரிய வந்தது. இங்கே நேரடியாக உதவி பண்ணாமல் உதவி பண்ணுவதை போல நடிப்பாவார்களும் இருக்கிறார்கள். இயலமையால் உதவி பண்ண முடியாதவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் உங்களோடு இருப்பவர்கள் எந்த ராகம் என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். காலம் இந்த விஷயங்களில் கண்டிப்பாக நடிப்பவர்களை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிடும். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...