ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - ORU KILI ORU KILI SIRU KILI UNNAI THODAVE ANUMADHI (LEELAI MOVIE FAMOUS SONG)- TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி !
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நானல்ல உனக்குதான் என்று உணர்கிறேன் நிழலென தொடர்கிறேன்

விழி அல்ல விரல் இது ஓரு மடல்தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது
இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி !

தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே
தோகையே உன்னை நான் தேடியே வந்தேன் இங்கே
பொய்கையை போல் கிடந்தவள் பார்வை என்னும்
கல் எறிந்தாய் தேங்கினேன் உன் கையில் வழங்கினேன் இன்றே
தோழியே உன் தேகம் இளம் தென்றல்தான் தொடாததோ ?
தோழனே உன் கைகள் தொட நாணம் தான் விடாததோ ?

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி !
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நானல்ல உனக்குதான் என்று உணர்கிறேன் நிழலென தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி !

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...