வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

GENERAL TALKS - தெளிவற்ற நாட்களாகவே வாழ்க்கை நகர்கிறது ! - 1


காலங்கள் கடந்துகொண்டு இருக்கிறது, நாட்கள் இப்போதெல்லாம் வேகமாக செல்கிறது, உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் இந்த தொலைவு இன்னும் அதிகமாக இருக்கிறது. உன்னுடைய பிரிவினால் எனக்குள் பாதிப்புகள் அதிகமாகிறது, இந்த உலகத்தில் அனைவரும் எதையோ ஒன்றை எதிரபார்க்கிறார்கள், எதிர்ப்பார்ப்புகளை என்னால் கொடுக்க முடியாத நிலை உருவானால் நானும் ஒரு கட்டத்தில் வெறுக்கப்படுவேன். உடல் மெலிந்து நலம் குறைந்த முதுமைப்பருவம் மரணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவிடும் ஆனால் உன்னை நான் எந்த ஒரு கட்டத்திலும் உண்மையாக நேசிக்கிறேன், என்னால் முடியாமல் போகலாம், நானும் சாதாரணமான மனிதன்தான், கற்பனையான விஷயங்களை கொண்டாடும் இந்த உலகம் உண்மை அன்பை துளியும் சேர்த்து வைப்பது இல்லை. உனக்கு என்னுடைய கடினமான வாழ்க்கை புரியாது, நான் ஒரு ஒரு நாளும் நரகம் என வாழ்கிறேன், ஒரு ஒரு நொடியும் என்னுடைய வாழ்க்கையின் கடினத்தன்மை அதிகமாகிறது, இந்த வார்த்தைகள் கற்பனையென தோன்றலாம் ஆனால் என்னுடைய மனதுக்குள் இந்த நொடியில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே இந்த வார்த்தைகளில் சொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது, என்னால் முடியவில்லை, வாழ்க்கையில் வெற்றி அடைய நான் எல்லைகளை கடந்து செல்ல முயற்சி செய்தேன், இந்த முயற்சி என்னை பாதித்துவிட்டது. உன்னை நான் இந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பது கடைசி வரையில் யாருக்கும் தெரியாமலே போகட்டும், என்னுடைய அன்பை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நேற்றைய நாளை விட எனக்கு இன்றைய நாள் கடினமானது, நான் நம்ப மறுத்தாலும் உண்மை என்னவென்றால் உனக்கும் எனக்கும் இருக்கும் இந்த தொலைவு என்னுடைய வாழ்க்கை முழுவதும் நிறந்தரமானது, ஆனால் இந்த தொலைவு நிரந்தரமானது இல்லை. என்னுடைய அன்பு 100 சதவீதம் உண்மையானது.ஒரு ஒரு முறையும் வலைப்பூவில் எழுதவேண்டும் என்று நினைத்தால் உனக்கும் எனக்கும் இடையில் உள்ள இந்த தொலைவின் காரணமாக உருவான பிரிவுதான் எனக்கு மனதுக்குள் தோன்றுகிறது, நிறைய வருடங்கள் ஒரு மின்னஞ்சல் கணக்கு பயணபடுத்தப்படாமல் போனால் அந்த கணக்கு முடக்கப்படும், என்னுடைய வார்த்தைகளை பதிவு செய்த இந்த வலைப்பக்கமும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் கற்பனையான விஷயங்கள்தான் இண்டரெஸ்ட்டிங்-ஆக உள்ளது, நிஜத்தை மறுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தால் நிஜத்தை மறந்து கனவு உலகத்தை புவியில் சொந்தமாக்குகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...