வெள்ளி, 5 ஏப்ரல், 2024

MUSIC TALKS - KAADHAL VAITHU KAADHAL VAITHU KAATHIRUNDHEN - SONG LYRICS - பாடல் வரிகள் !

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிாித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
 
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நோில் உன்னையே பாா்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பாா்க்கும் மயக்கத்தில்தான்
அந்திமாலை மறைவதெல்லாம் உன்னை பாா்த்த கிறக்கத்தில்தான்
 
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன் 
 
உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்
 
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிாித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
 
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...