அந்தத் தீவு மக்கள் மீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். மீனவர்கள் படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற் பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும். ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும். மீனவர்கள் கையோடு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப் படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர். இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டுவந்தனர். ஆயினும், அத்தனைப் பெரிய கடற் பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப்போவதாக மீண்டும் குறை… இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யோசித்தார்கள் மீனவர்கள்.. புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள். குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள். இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக...அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி. இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது..இந்த கதையை படிக்கும்போதுதான் கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல் பலத்தை வைத்து எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பார்க்க முடிகிறது. ஒரு மனிதனை சக்கையாக பிழிவது மட்டுமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக வேலையை கொடுத்து அவனால் முடிக்க முடியாது என்று தெரிந்தும் அவனை துன்புறுத்துகிறார்கள். இருந்தாலும் மோசமான விஷயம் பொது மக்களை கார்ப்பரேட் எப்போதுமே வலை போட்டு சிக்க வைப்பது மட்டும் இல்லாமல் பின்னாட்களில் சுறா மீன்களை இறக்கவிட்டு பயந்து ஓடவிட்டு நமது கஷ்டத்தை பார்த்து சந்தோஷத்தை எடுத்துககொள்கிறார்கள். இப்படி இரத்தத்தை சாப்பிடும் ஆட்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். நிஜமாகவே உலகத்துக்கு ஒருவர் உதவி செய்ய போராடினால் கடவுள் கையையும் கால்களையும் உடைத்து விட்டு இன்வெஸ்டிகேஷன் ஜெயில் போல டார்ச்சர்தான் பண்ணுகிறார்/ மேலோகத்துக்கும் போட்டிகள் கைமாறுகிறதா என்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக