சமீபத்தில் இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்". அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்." "ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி. "உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்" "அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார். "இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்." முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?" "அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக ஆக இருந்தேன், ஏன் ?" "இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்" என கூறினார். விற்பனை நோக்கம் கொண்டு செய்யப்படும் அனைத்து செயல்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஸ்மார்ட்னேஸ் நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை நம்மால் எப்போதுமே மறுக்க முடியாது. வணிகத்தில் நம்முடைய பொறுப்புகள் எப்போதுமே அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த வகையில் நாம் வளர்த்துக்கொள்ளும் திறமைகள் எப்போதுமே நமக்கு பயன்படுகிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக