செவ்வாய், 2 ஏப்ரல், 2024

GENERAL TALKS - வொய் டென்ஷன் ! லெஸ் டென்ஷன் ! மோர் வொர்க் !!




ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது.! ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான். அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார், “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான். உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாரு. “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமாவே இருக்கு, நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குறவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல. புரியுதா ? காசை வாங்கிட்டு போ. ” அப்படின்னு கோபமாக சொன்னாரு. அவன் ஒரு நிமிஷம் அவரை குறு  குறுன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க. அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன்?” அப்படின்னு கேட்டாரு…அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான்…! ” டீ கொண்டு வந்த பையன் முதலாளி ". இப்படி காரணமே இல்லாமல் கோபப்பட்டு முடிவு எடுப்பவர்களை யாராலுமே மாற்றவே முடியாது. உங்களுக்காக யாராவது வேலை பார்த்தால் அவர்களை நம்புங்கள். நம்பிக்கையே இல்லாமல் இருக்காதீர்கள்.  வொய் டென்ஷன் ! லெஸ் டென்ஷன் ! மோர் வொர்க் !!

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...