சனி, 27 ஜனவரி, 2024

MUSIC TALKS - VASSEGARA EN NENJINIKKA UN PONMADIYIL THOONGINAL PODHUM - VERA LEVEL PAATU !

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே

ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் 

குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் 
தலை துடைப்பாயே அது கவிதை

திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை 
நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலென்னும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே

ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே நான்

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...