செவ்வாய், 23 ஜனவரி, 2024

GENERAL TALKS - சோதனை மேல் சோதனை , போதும் தலைவா !




ஒரு சோதனை எலியை போல அடுத்து எனக்கு என்ன சோதனை வரப்போகிறது என்று பயந்து பயந்து கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கை யாருக்குதான் பிடிக்கும் ? நம்முடைய வாழ்க்கையில் நாமும் எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் கடவுள் நம்முடைய முயற்சிகளை நெருப்பால் அழித்துவிடுகிறார். உதாரணத்துக்கு நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய வாழ்க்கையில் ஒரு இலட்சியம் பண்ணிவிட்டு மிகவும் கஷ்டப்பட்டு நடனத்தை கற்றுக்கொண்டு நம்மிடம் இருக்கும் பணம் எல்லாம் கரைந்துபோன பின்னால் நம்முடைய கால்களை உடைத்துவிடுகிறார். இதனால்தான் என்னுடைய வாழ்க்கையில் நான் பண்ணும் முயற்சிகள் எல்லாமே தனிப்பட்ட முயற்சியாக மட்டும்தான் பண்ணுகிறேன். தோல்விகளை கண்டு நான் பயப்படுவது இல்லை. வெற்றிகளை வந்ததுமே சந்தோஷப்படுவதுமே இல்லை. இது எல்லாமே எதனால் நடக்கிறது என்று எனக்கு எந்த காரணம் விளைவு குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளுமே எனக்கு தேவை இல்லை. நான் இந்த விஷயங்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். நாம் 100 சதவீதம் மூளையை பயன்படுத்தி நம்முடைய திட்டங்களை கொண்டு முயற்சி பண்ணினாலும் கடவுள் நம்மை ஒரு சின்ன வட்டம் போட்டு அதனுக்குள்ளே அடைத்து வைக்கிறார். தொடர்ந்து தோல்விகளை அடையும்போது வாழ்க்கை மேலே இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையுமே கரைந்து காணாமல் போய்விடுகிறது. தோல்வி நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான் அதுவே வாழ்க்கை இல்லை என்று நமக்கு தெரிகிறது ஆனால் அறிவுக்கேட்ட முட்டாள் மக்களுக்கு தெரிவதே இல்லையே ! இவர்களிடம் மட்டும்தான் எதேச்செயான பணமும் அதிகாரமும் இருக்கிறது. நாம் என்ன பண்ண முடியும் ? தோல்வியை அடையக்கூடாது , தோல்விகளின் தொடர் சூழலில் சிக்க கூடாது என்று நாம் கஷ்டப்பட்டு என்ன செயல்களை பண்ணினாலும் கடவுள் அந்த செயல்களை தடுத்துக்கொண்டே இருப்பது மிகவும் கோபமாக இருக்கிறது. இப்போது வரைக்குமே நம்முடைய உடல் நலமும் மனநலமும் நன்றாக வைத்து இருப்பதும் அறிவை தொடர்ந்து அப்கிரேடு செய்துகொண்டே இருப்பதும்தான் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிட சரியான தீர்வாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...