ஞாயிறு, 14 ஜூலை, 2024

MUSIC TALKS - NENJE NENJE NEE ENGE ? NAANUM ANGE , EN VAALVUM ANGE , ANBE ANBE NAAN INGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப்போனாய் 
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சோ்கிறாய் ?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல் 
வானும் இம்ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை க‌ொண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பாா்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிா் நீளும் 
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா  க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல் 
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே 
காற்று நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ம‌ஞ்சள் தாம‌ரையே என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப்போனாய் 
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே ஏன் வைகிறாய் ?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...