வெள்ளி, 26 ஜூலை, 2024

CINEMA TALKS - VADAKKUPPATTI RAMASAMY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



வடக்குப்பட்டி ராமசாமி - கடவுள் மீது நம்பிக்கை இருக்கலாம் ஆனால் கடவுளை கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். 1970களின் காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் கடவுளின் சக்திகளை அறிந்து கொண்ட ஒரு கடவுள் அருள் நிறைந்த இளைஞனாக வலம் வரும் ராமசாமி மக்களை நம்ப வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடவுளின் பெயரால் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார் உள்ளூர் தாசில்தாரால் மடக்கப்பட்ட ராமசாமி ஒரு கட்டத்தில் அரசாங்கத்தால் கோயில் மற்றும் கோயில் சார்ந்த நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற கட்டாயம் இருக்கும்போது எப்படி சிறப்பாக யோசித்து சின்ன சின்ன யாருமே எதிர்பாராத புத்திசாலித்தனம் நிறைந்த திட்டங்களை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை நம்பிக் கொண்டிருக்கும் உள்ளூர் கிராமத்து மக்களுடைய மனதை மாற்றி கோயில் நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் சுருக்கமான கதைக்களமாக இருக்கிறது. சும்மா சொல்ல கூடாது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காமெடி காட்சிகள் வேறு லெவல். மேலும் கடந்த காலத்தின் கடந்த காலத்தின் கிராமத்து வாழ்க்கையையும் மக்களின் வாழ்வியலையும் மிகவும் கலகலப்பாக சொல்லி இருக்கும் இது போன்ற படங்கள் இனிமேல் வருவது கடினம். முண்டாசுப்பட்டி என்ற படத்துக்குப் பின்னால் இது போன்ற கிராமத்து படங்களை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடிவதில்லை என்று ஒரு ஆச்சரியம் இருக்கும்போது இப்போது இந்த படம் வெளிவந்து அந்த திரைப்படங்களின் புதுமை தன்மையை மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஏற்றுள்ளது என்றே சொல்லலாம் படத்துடைய காட்சி அவர் அவருக்கு மிகவும் பிரமாதமாக உள்ளது இந்த படத்துக்கு நிறைய ப்ரொடக்ஷன் வேல்யூ கிடைத்திருப்பதால் இந்த படத்திலேயே கதையை மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்ல போதுமான பொருளாதார வசதிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டு கொடுத்திருப்பது மிகவும் சிறப்பான விஷயம் என்று சொல்லலாம் மேலும் சப்போர்ட்டிங் கேரக்டராக வரக்கூடிய தாசில்தார் கதாபாத்திரம் கூல் சுரேஷ் மாப்பிள்ளை பாத்திரம் இவைகள் எல்லாம் இந்த படத்தின் ஹைலைட் காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த படத்தில் கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரமாதமாக செய்து இருக்கலாம் ஆனால் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் போதுமான அளவுக்கு இருக்கிறது. மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி ஒரு கிராமத்தின் பின்னணியில் கலகலப்பான என்டர்டைன்மென்ட் காட்சிகள் நிறைந்த ஒரு காமெடி திரைப்படம் என்று கூட சொல்லலாம்


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...