இன்றைக்கு தேதிக்கு துல்லியமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகப் பெரிய நிறுவனங்களில் சிறப்பான வேலைகளில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நிறைய சம்பளமும் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் எதனால் தமிழ் மொழிக்கு அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குகிறது.
இந்த குழப்பமான எக்கனாமிக்கல் சிஸ்டம் தான் ஆங்கில விஷயங்களுக்கு அதிகமான பணத்தை கொடுக்கும் பணம் சம்பந்தப்பட்ட மொழியாக மாற்றி விடுகிறது ஆனால் தமிழ் என்ற மொழி இப்போது அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய மொழியாக இருக்கிறதா என்று கேட்டால் வாய்ப்புகள் குறைவுதான். ஒரு வருடத்திற்கு தமிழ் மொழியில் மட்டும் 260 திரைப்படங்களுக்கு மேல் வருகிறது
இது மிகவும் சராசரியான எண்ணிக்கை தான். இந்த திரைப்படத்தின் பயன்களாக சொல்லப்படக்கூடியது தமிழ் மொழிகளும் தமிழ் கருத்துக்களும் பெரும்பாலும் நிறைய மக்களை சேர்ந்தடைகிறதா ? என்றால் அதுதான் கிடையாது.
இதுவே ஆங்கிலம் என்ற மொழியை எடுத்துக் கொள்ளுங்கள் என வருடத்துக்கும் மிகவும் குறைவான அளவிலான படங்கள்தான் ஆங்கிலத்தில் வெளி வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் இந்த படங்கள் மிகச் சிறப்பான வெற்றியை அடைய காரணம் என்னவென்றால் இவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது
இவர்களுடைய ப்ரொடக்ஷன் வேல்யூவை நம்முடைய ப்ரொடக்ஷன் வேல்யூவால் கண்டிப்பாக மிஞ்ச இயலவில்லை. இவர்களுடைய இந்த புரொடக்ஷன் வேல்யூவை வைத்துக் கொண்டே இவர்களால் மக்கள் கனவுகளும் எதிர்பாராத காட்சிகளை உருவாக்கப்படுகிறது அதனால் வெற்றியும் அடைய முடிகிறது.
இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு மொழியுடைய முன்னேற்றம் அந்த மொழியில் எத்தனை விஷயங்கள் உருவாகிறது என்பதை பொறுத்து அல்ல ஆனால் அந்த மொழி பேசுபவர்களிடம் எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். பொருளாதாரம் என்பது ஒரு மொழியை காப்பாற்றுவதற்கு கூட தேவைப்படுகிறது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது
1 கருத்து:
தமிழன் கலாச்சாரத்தை மதிக்கவில்லை. காணாமல் போகிறான்.
கருத்துரையிடுக