சாலையோரங்களில் இது போன்ற ஒரு பொதுநல சுவரொட்டிகளை பார்க்கலாம் "மிதமான வேகம் மிகவுமே நல்லது" என்பது இந்த விஷயம் சாலையில் பயணிப்பதற்கு மட்டும் முக்கியமானது அல்ல நம்முடைய உடலையும் மனதையும் பாதுகாப்பதற்கும் மிகவும் முக்கியமானது
நம்மளுடைய மனதை மிகவும் மெதுவாகவும் வைத்திருக்கக் கூடாது மிகவும் வேகமாகவும் வைத்திருக்கக் கூடாது அடிப்படையில் நாம் செயல்களை தள்ளிப் போட்டால் முன்னேற்றம் வெற்றியும் தள்ளிப் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் அதேபோல அடிப்படையில் நாம் செயல்களை அவசர அவசரமாக செய்து முடித்தால் அந்த செயல்களுடைய நல்ல அனுபவ அறிவை நாம் இழந்து விடுவோம்
இப்போது நம் உடலை பயன்படுத்துதல் பற்றி யோசிக்கலாமே நம்முடைய உடலுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் நம்மளுடைய உடல் வந்து போதுமான கலோரிகளை சேர்த்து வைத்து சேர்த்து வைத்து நம்முடைய உடல் அதே நேரத்தில் நம் கடினமாக வேலை பார்க்க ஆரம்பித்தால் மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடல் தேய்மானம் அடைந்து நம்முடைய உடலில் எலும்புகள் தேய்ந்து போய் நரம்புகள் சோர்வடைந்து பின் நாட்களில் நம்முடைய வேலையின் பலனை நம்மால் அனுபவிக்க முடியாமலே போய்விடும்
நீங்கள் விளையாட்டு கொடுக்கிறீர்களோ அல்லது உடற்பயிற்சி கொடுக்கிறீர்களோ அல்லது உங்களுடைய வேலைகளே கவனம் செலுத்தி வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அது பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை ஆனால் இந்த உடலை நீங்கள் மிகவும் சரியாக பயன்படுத்த எப்போதுமே நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் பிரயோஜனமாக இருக்கும் இங்கே நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டுபிடித்து பிரச்சினைகளை நிரந்தரமாக சரி செய்வது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் என்று நினைக்கிறார்கள்.
இந்த கற்பனையான நம்ப முடியக்கூடிய கருத்துதான் நிறைய பேருடைய வாழ்க்கையை நாசம் பண்ணி கொண்டு இருக்கிறது. இப்போது நிறைய பேருக்கு போதைபழக்கமும் பொழுதுபோக்கு பழக்கமும் இருக்கிறது இந்த இரண்டு பழக்கங்களுமே நம்முடைய நேரத்தையும் பணத்தையும் அதிகமாக விரயம் பண்ணக்கூடிய விஷயங்கள்தான்.
இதோ இப்போதே எந்த நொடியே விட்டு விடுகிறேன் இனிமேல் இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது என்று சொன்னால் இந்த விஷயங்கள் நம்மை விட்டு செல்ல போகிறதா என்ன ? போதை மற்றும் பொழுதுபோக்கு இந்த இரண்டு விஷயங்களை ஒரு சரியான அறிவியல் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்களேன் இந்த இரண்டு விஷயங்களும் நம்முடைய மூளைக்குள் நன்றாக பின்னிப்பிணைந்து இருக்கிறது இவைகளை ஒரே நொடியில் விடுவதை என்றால் கடவுளின் அவதாரமாக இருந்தாலும் கூட அவருடைய சக்தியை பயன்படுத்தினால் கூட மிகவும் கடினமான விஷயம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக