வெள்ளி, 6 டிசம்பர், 2024

STORY TALKS - EP.012 - சிறப்பான விஷயம் படங்களுக்கு தேவை (SIX UNDERGROUND , SINGLE SHANKARUM SMARTPHONE SIMRANUM)

நீங்கள் நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கும் ஒரு ஆக்ஷன் அட்வென்சர் பட விரும்பியாக சிக்ஸ் அன்ட்ர்க்ரவுன்டு படம் உங்களுடைய பொறுமையை கண்டிப்பாக ரொம்பவுமே சோதிக்கும். ஒரு கணக்கு இல்லாமல் பாவங்களை பண்ணும் தனியார் நிறுவன முதலைகளும் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் அதிகார வர்க்க ஆட்களும் என்று ஒரு பெரிய அலுவல் நெட்வோர்க்காக வேலை பார்க்கும் பணக்கார முதலைகளை நேருக்கு நேராக எதிர்த்து மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடும் 6 பேர்  திறன்மிக்க போராட்ட கும்பலின் கதைதான் இந்த கதை. விஷயம் என்னவென்றால் நெட்ஃப்ளிக்ஸ்ஸின் ஒரு முறை பார்க்கலாம் என்ற பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாகவும் கதை அமைப்பு குறைச்சலாகவும் இருப்பதால் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு கதையோடு பொருந்தி செல்ல முடியவில்லை என்பதுதான் குறையே தவிர்த்து ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு கொடுக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்த படத்துக்காக கொடுத்து இருக்கிறார்கள். இந்த படத்துக்கு நன்றாக வொர்க் பண்ணி இருந்திருக்க வேண்டும். ஜனரஞ்சகமாக அடுத்து என்ன நடக்கும் என்ற இண்டரெஸ்ட்டை படத்துக்கு உருவாக்கி இருந்தால் இந்த படம் கண்டிப்பாக இப்போது அடைந்த வெற்றியை விட இன்னும் அதிகமாக இந்த படம் அடைந்து இருக்கும். 


இந்த படம் தெளிவாக எடுத்தப்பட்ட பட்ஜெட் காமெடி படம் , இங்கே வித்தியாசமாக படங்களை எடுத்து அதுவும் சரியாக பிலிம் மேக்கிங் பண்ணிய படங்கள் கொஞ்சமதான். இந்த வகையில் கவனிக்க வேண்டிய ஒரு படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் என்ற இந்த படம். AI தொழில் நுட்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரு சாஃப்ட்வேர் ஒரு இளைஞரை திருமணம் செய்து வாழ முயற்சி செய்யும்போது அந்த இளைஞர் ஆரம்பத்தில் எதுவும் புரியாமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஒரு ஃபோன் தனக்கு அட்ராக்ஷன் ஆகிறது என்று தெரிந்ததும் எஸ்கேப் ஆக பார்க்கும்போது AI மொத்த டெக்னாலஜியும் வைத்து காதல் தோல்விக்கு பழி வாங்கும் காமெடிதான் படத்தின் கதை. இது பேசிக்கலி அவேன்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படம்போல ரசிக்க வேண்டிய AI பிக்ஷன். பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருந்து இருக்கலாம். கிளைமாக்ஸ் நன்றாக வொர்க் பண்ணி இருக்க வேண்டும். விஷுவல் எப்பேக்ட்ஸ்களில் துல்லியம் வேண்டும். ASYLM STUDIO ப்ரொடக்ஷன் போல இந்த படம் மாறிவிட்டது. இருந்தாலும் படம் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது. 





கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...