இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் இவ்வளவு ஸ்பெஷல்லான ஒரு சூப்பர் ஹீரோ படத்தை பார்த்தது இல்லை. ஒரு வருடம் காத்திருப்புக்கு ரொம்ப தரமான படம். இந்த படம் சோசியல் மெசேஜ் சொல்லும் ஒரு நல்ல வில்லேஜ் டிராமாவாகவும் வெற்றி அடைகிறது அதே சமயத்தில் ஒரு நம்ம கலாச்சாரத்தோடு சேர்த்து பார்க்கும் அளவுக்கு ஒரு ஃபேமிலி சூப்பர் ஹீரோ படமாகவும் இருக்கிறது. இந்த படத்துடைய கதை. சின்ன வயதில் மின்னல்லால் தாக்கப்பட்டதால் சூப்பர் சக்திகளோடு இருக்கும் நம்ம ஹீரோ குமரன். மருத்துவத்துக்காக வெளியூர் போன பின்னால் மறுபடியும் சொந்த ஊருக்கு பல வருடங்களாக திரும்பவே இல்லை. ஒரு நாள் சர்ப்ப்ரைஸ்ஸாக வீரனூர் கிராமத்துக்கு வரும் குமரன் சொந்த ஊரில் ஒரு கம்பெனி தடை செய்யப்பட்ட லேசர் ஆராய்ச்சியை கொண்ட ஒரு சிஸ்டம் அமைப்பதை பார்க்கிறார், அந்த ஆராய்ச்சியால் வீரனூர் மற்றும் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் நிறைய இடங்களில் ஒரு பெரிய விபத்து உருவாகப்போகிறது என்பதை தெரிந்துக்கொண்ட குமரன் எப்படியாவது இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வீரனூர்ரின் புகழ்பெற்ற கோவிலாக இருந்த வீரன் கோவிலை சப்போர்ட் பண்ணி அந்த கடவுள் நேரில் வந்து அந்த ஊரை காப்பாற்றுவதாக நம்பவைக்கிறார். ஆனால் டெக்னாலஜியின் நிறைய எல்லைகளை தெரிந்துகொண்டு இருக்கும் நமது கொடூரமான கொலைகளை பண்ணும் வில்லனாக இந்த போட்டியில் களம் இறங்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆயுதங்களை தயாரிப்பதில் சிறப்பான சரத்தின் வலையில் இருந்து குமரனின் முயற்சிகளால் தப்பிவிட முடியுமா ? தடயமில்லாமல் கொல்லும் சரத்தின் புதிய டெக்னாலஜியையும் மீறி சுயநலத்துக்காக சொந்த கிராமத்தை விட்டுக்கொடுத்த மக்களை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று உயிரை பணயம் வைத்து முயற்சிகளை பண்ணும் குமரன் கடைசியில் சாதித்தாரா என்று விறுவிறுப்பாக சொல்கிறது இந்த படத்தின் கதைக்களம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு தேவையான அளவுக்கு இருக்கிறது. ஆதி , வினய் , முனிஷ் காந்த் , காளி வெங்கட் , சசி செல்வராஜ் மற்றும் புதிய ஜெனரேஷன் யூ ட்யூப் சேனல்களின் ஸ்டார்கள் கெஸ்ட் ஆப்பியரன்ஸ் கொடுக்க படம் சிறப்பான நடிப்புக்கு குறையில்லாமல் திரைக்கதைக்கு சப்போர்ட் பண்ணுகிறது. பொதுவாக எமோஷனல்லாக கதையின் கதப்பாத்திரங்களோடு கனெக்ட் பண்ணிக்கொள்ள முடிகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் எதிர்பார்க்கும் நிறைய விஷயங்கள் பட்ஜெட்ல எடுத்த இந்த படங்களில் ஃபோகஸ் பண்ணப்பட்டு இருக்கிறது. மற்றபடி லேசர் டெக்னாலஜி மற்றும் வினய்யின் கெமிக்கல் டெக்னாலஜி போன்றவைகள் சயின்ஸ் அடிப்படையில் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணப்படாமல் இருந்தாலும் ஒரு கமர்ஷியல் படத்துக்கு அவசியம் இல்லை என்பதால் அவ்வளவாக பிரச்சனையாகவே இல்லை. மொத்ததில் ஒரு பெஸ்ட் பட்ஜெட் சூப்பர் ஹீரோ படம். கண்டிப்பாக நிறைய முறை பார்க்கலாம், கிரியேடிவிட்டியை விட கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூல ரொம்ப நல்ல கான்செப்ட் சொல்லும் படம். கிளைமாக்ஸ்ல நல்ல மெசேஜ் இருக்கிறது. மிஸ் பண்ணாமல் பாருங்கள் !!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக