வியாழன், 16 நவம்பர், 2023

CINEMA TALKS - PATHAAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 பதான் - பாலிவுட்ல எக்கச்சக்கமான பிரச்சனைகள் சென்றுகொண்டு இருந்தாலும் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ஸை தெறிக்க விட வெளிவந்துவிட்டது. இந்த படம் இன்டர்நேஷனல் லெவல்க்கு பொடன்ஷியல் கொடுத்து நம்ம பாலிவுட்ல எடுக்கப்பட்ட படம். நிறைய இடங்களில் படத்தில் எண்டர்டெயின்மெண்ட் வேல்யூவுக்கு குறை வைக்கவே இல்லை. விஷுவல்லாகவும் ஒரு நல்ல நிறைவான ஆக்ஷன் படம்தான் இந்த பத்தான். ஷாரூக்கான் இந்தியாவுக்காக இன்டர்நேஷனல் லெவல்லில் மிஷன்களை முடிக்கும் ஒரு அதிகாரி. ஒரு கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மிஷன்னில் இந்த உலகத்தை அழிக்கக்கூடிய ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ்ஸை அழிக்க முயற்சிபண்ணும்பொது நம்பிக்கையான பார்ட்னரரால் ஏமாற்றப்பட்டு வைரஸ் வில்லன்களிடம் கைமாறுகிறது. இப்போது உலகத்தையே அழிக்கும் அளவுக்கு கேபாஸிட்டி , பவர், ஆட்கள் என்று எல்லாமே இருக்கும் வில்லனாக களம் இறங்கும் ஜிம்-மை நேருக்கு நேராக எதிர்க்கும் பதானால் தோற்கடிக்க முடியுமா ? இப்படித்தான் கதைக்களம். பாலிவுட் மசாலா படங்களின் கதை , ஆக்ஷன் , ரொமான்ஸ் , பாடல்கள் என்று தவிர்க்க முடியாத எல்லா விஷயங்களுமே படத்தில் இருந்தாலும் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற வகையில் ஒரு நல்ல என்ட்ரி. இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்லுவதை விட பெஸ்ட் இன் ஸ்டைல் என்று சொல்லலாம். மிஷன் இம்போஸ்சிபல் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல ஒரு நல்ல ஸ்பை படமாக கொடுக்க பண்ணப்பட்ட அனைத்து முயற்சிகளுமே படத்துக்கு பலன் கொடுத்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் ஸ்டாண்டர்ட்ஸ் நல்ல அப்டேட் கொடுத்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கிரியேட்டிவ் பாயிண்ட் ஆஃப் வியூல வொர்க் பண்ணி இருப்பதால் படத்தில் குறை சொல்ல எதுவுமே இல்லை. இந்த சினிமாட்டிக் யுனிவெர்ஸ்ஸின் மற்ற படங்களை நான் பார்த்தது இல்லை என்பதால் கண்டிப்பாக இந்த விமர்சனத்தில் நான் விட்டுவிட்ட விஷயங்கள் என்று ஏதாவது இருந்தால் கமெண்ட் செக்ஷன்னில் சொல்லவும். மொத்ததில் எனக்கு பிடித்து இருந்தது. ஒரு டீசண்ட்டான ஆக்ஷன் அட்வென்சர். குறிப்பாக ஸ்டண்ட்ஸ் எல்லாமே வேற லெவல் . கம்பேர் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப நேர்த்தியாக ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நான் ரொம்பவுமே ரசித்தது இந்த படத்தின் கிரேயடிவிட்டிதான் அது மட்டுமே இல்லாமல் கொஞ்சம் நம்ம ஊரு பேட்ரியாட்டிஸம்மும் படத்தில் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் சீனியர் ஆக்டர்ஸ் என்பதால் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் அவர்களின் கதாப்பாத்திரங்களை பெஸ்ட்டாக பண்ணி கொடுத்து இருக்கிறார்கள். வில்லனாக களம் இறங்கும் ஜான் ஆபிரகாம் ரொம்ப நன்றாகவே பண்ணி கொடுத்துள்ளார். பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு இந்த பதான் ஒரு சவுத் இந்தியன் பிரசன்டேஷன் என்றே சொல்லலாம். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...