வியாழன், 14 செப்டம்பர், 2023

CINEMA TALKS - SARAVANAN IRUKKA BAYAMEN - - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



பொதுவாகவே உதயநிதி ஸ்டாலின்க்கு ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் மிகவும் அருமையாக செட் ஆகும். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பின்னால் ரசிக்கும்படியாக இன்னொரு அருமையான படம் பார்த்தேன் என்றால் அதுதான் சரவணன் இருக்க பயமேன். இந்த படத்துடைய மெயின்னான கதை சரவணன் எப்படியாவது தனக்கு எப்போதுமே தனக்கு போட்டியக்கவே செயல்படும் தேன்மொழியை காதலிக்க முயற்சி பண்ணுகிறார் -  இங்கேதான் ஒரு நல்ல பிளாட் டுவிஸ்ட். கொஞ்சமும் நேசிக்காத தேன்மொழி இப்போது சரவணனுக்கு நிறைய சப்போர்ட் கொடுக்கிறார் ஆனால் உண்மை என்னவென்றால் கல்லூரியில் படிக்கும்போது சரவணனை காதலித்த பாத்திமாவின் உயிர்தான் இப்போது தேன்மொழியின் மனதுக்குள் இருக்கிறது, இந்த விஷயங்களை கடைசியில் புரிந்துகொள்ளும் சரவணன் அடுத்து என்ன பண்ணுகிறார் என்பதுதான் கதை. நான் நிறைய போஸ்ட்களில் சொல்லியிருப்பது போல ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான விஷயம் நல்ல பிரசன்டேஷன்தான். அது இந்த படத்தில் நன்றாகவே இருக்கிறது. படம் விஷுவல்லாக ஒரு பாஸ்ஸபில் என்டர்டைன்மெண்ட்தான். ஒரு ரொமான்டிக் காமெடியாக ஆரம்பித்து சூப்பர் நேச்சுரல் எலிமெண்ட்ஸ் சேர்த்து படம் நன்றாக நேர்த்தியாக வந்துள்ளது. படத்துக்கு நகைச்சுவை வேண்டும் என்ற வகையில் ஒரு பெரிய நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே பின்னணியில் வேலைபார்த்து கொடுத்துள்ளார்கள். ஒரு கமர்ஷியல் படம் என்ற வகையில் தேசிங்கு ராஜா மற்றும் வெள்ளைக்கார துரை படங்களை உங்களுக்கு நினைவுபடுத்தும் இந்த படம். மொத்தமாக நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கபடும் இந்த படங்களில் லாஜீக் தேடல்களை கொஞ்சம் தூரமாக தள்ளி வைத்துவிட்டு கதையின் ரசனையை ரசிக்க சினிமா ஆர்வலர்கள் முயற்சித்தால் இந்த படங்கள் உங்களின் ரசனைக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...