வியாழன், 14 செப்டம்பர், 2023

CINEMA TALKS - IVANUKKU THANNILA GANDAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



நிறைய நகைச்சுவை திரைப்படங்கள் நம்ம தமிழ் சினிமாவில் இருந்தாலும் இந்த படம் என்னுடைய ஃபேவரட் . பெரிய ஸ்டார் வேல்யு கொடுத்து படம் பேசப்படாமல் போகும்போது போதுமான ஸ்டார் வேல்யூ இல்லை என்றாலும் இந்த படம் ஒரு வெற்றிப் படமாக உள்ளது . சராசரி இளைஞராக இருக்கும் தீபக் அவருடைய வாழ்க்கையின்  பிரச்சனைகளை சமாளிக்கவே நேரம் போதாமல் இருக்கும் ஒரு ஃப்யூச்சர் ஆம்பிஷன்கள் நிறைந்த இளைஞராக வருகிறார். நிறைய நாட்களாக சோகமாகவே போன அவருடைய  வாழ்க்கையில் ஒரு காதல் வந்ததும் கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கிறது. ஆனால் அவருடைய வாழ்க்கையின் பிரச்சனைகளை சரி பண்ண வேண்டும் என்றால் பிரச்சனை பண்ணுபவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நண்பர்களுடன் போதையில் இருந்தபோது ஒரு பெரிய புரஃபஷனல் ஹிட்மேன்க்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போகிறார். முதலாக முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு பணக்கார டிவி ஆங்கர் இளைஞர் , இரண்டாவதாக ஒரு அநியாய வட்டி வசூல் பண்ணும் கும்பல் தலைவன் , மூன்றாவதாக காதலியின் பெயரையும்  சொல்லிவிட்டு கையில் இருக்கும் பணம் , கிரெடிட் கார்டு , பைக் , செயின் என்று எல்லாமே கொடுத்துவிட்டு போதை தெளிந்த அடுத்த நாளில் மொத்தமாக  மறந்தும் விடுகிறார். 


அடுத்த நாள் வரிசையாக அவருக்கு வேண்டாதவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக  தீர்த்துக்கட்டப்படும்பொது அலறியடித்துக்கொண்டு காதலியை காப்பாற்ற பண்ணும் முயற்சிகள் படத்தின்  கலகலப்பான சம்பவங்களாக போகிறது. இந்த கொலைகளுக்கு பின்னணியில் ராஜேந்திரன் கொடுக்கும் டுவிஸ்ட் வேற லெவல். மொத்ததில் ஒரு என்கேஜிங் ஆன காமெடி படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் கண்டிப்பாக பார்க்கலாம். தொலைக்காட்சி சீரியல்களில் எதார்த்தமான கதாப்பத்திரங்களை தீபக் நடித்திருந்தாலும் இந்த படத்தில் காமெடி காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்து கொடுத்து இருக்கிறார். இந்த படத்தின் ரொமான்டிக் போர்ஷன் கொஞ்சமாக இருந்தாலும் காமெடியில் குறைவைக்கவே இல்லை. எம் எஸ் பாஸ்கர் ஒரு டீசண்ட்டான கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். இந்த காசேதான் கடவுளடா படம் போல ப்ரமோஷன் பன்னும்போது யோகி பாபு , விஜய் டிவி புகழ் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களின் படங்களை பயன்படுத்திவிட்டு வெறும் இரண்டு நிமிட கேமியோவாக டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை. ராஜேந்திரன் இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். நிஜமாகவே சீரியஸ்ஸாக கொலை பண்ண முயற்சி பண்ணினாலும் கடைசியில் டைம் மாறுவது நல்ல டுவிஸ்ட்.  இந்த படம் முதல் ஸீன் முதல் கடைசி ஸீன் வரைக்குமே ஒரு நல்ல படம் பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்துள்ளது. பெரிய பட்ஜெட் காமெடி படங்களான நாய் சேகர் ரிடர்ன்ஸ் போன்ற  கிளைமாக்ஸ்ல டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணும்  படங்களை இப்போது இந்த படத்தோடு கம்பேர் பண்ணும்போது பார்த்தால்  இந்த படம் வெளிவந்த காலத்தில் ஒரு நல்ல ஆன் ஸ்கிரீன் பிரசன்டேஷன் என்றே சொல்லலாம்.. 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...