வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

CINEMATIC WORLD 091 - SAFETY NOT GUARENTEED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

 

SAFTEY NOT GUARENTEED - பெரிய பட்ஜெட் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை விட்டுவிடலாம், இப்போது ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்துக்கொள்ளலாம். சேஃப்டி நாட் காரன்டிட் இந்த படம் 2012 ல் வெளிவந்தது. பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் பெரிய லெவல் ரிலீஸ் இல்லை என்றாலும் அதிகமாக பணம் செலவு பண்ணாமல் ஒரு மினிமம் காஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் ஃப்யூச்சர் லெந்த் படம் எடுக்க இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பிள் என்றே சொல்லலாம். 

மேகஸின் எழுத்தாளரான டெரியஸ் மற்றும் அவளுடைய நண்பர்கள் அவர்கள் மேகஸின் பக்கத்தில் வந்த ஒரு வித்தியாசமான விளம்பரத்தை கொடுத்தவரை பின்தொடர முயற்சிக்கின்றனர். கென்னத் என்று சொல்லப்படும் இவர் காலத்தை கடந்து வந்தவர் என்றும் அவரோடு டைம் டிராவல் பண்ண இன்னொருவர் தேவை என்றும் என்னமோ எஸ்டேட் பார்த்துக்கொள்ள சூப்பர்வைஸர் வேலை பார்க்க ஆட்கள்  தேவை என்பது போல விளம்பரம் கொடுத்து இருக்கிறார் இந்த நபர். 

இவரை தொடரும் அந்த பத்திரிக்கை மேகஸின் குழுவினர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதை இந்த படத்தின் கதை ஆகும். கென்னத் மற்றும் டெரியஸ் கதாப்பாத்திரங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லூபேர் போன்ற டைம் டிராவல் படங்கள் பெரிய பட்ஜெட்டில சின்ன கதையை சொல்வது போல இந்த படம் சின்ன பட்ஜெட்டில் சின்ன கதைகளை சொல்கிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போல இல்லை என்றாலும் ஒரு ஸ்லைஸ் ஆஃப் லைப் டிராமா என்று இந்த படத்தை சொல்லலாம். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...