புதன், 2 ஆகஸ்ட், 2023

CINEMATIC WORLD - 081 - SPECIAL MENTIONS FROM LAST 3 YEARS - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000115]

 



MY SPY - 2023

இன்டெல்லிஜேன்ஸ் துறையில் தகவல் சேகரிப்பதற்காக ஒரு குடும்பத்தை கண்காணிக்கும் பொறுப்பை எடுத்துககொள்கிறார் அதிகாரி ஜே ஜே மற்றும்  அவருடன்  வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் திறன்மிக்க பாபி. ஆனால் இவர்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும் கண்காணிக்கப்பட வேண்டிய குடும்பத்தின் இளைய மகளான சோஃபியிடம் ஜே ஜே மாட்டிக்கொண்டதால் ரகசிய கண்காணிப்பே விட்டுவிட்டு சோஃபியின் சராசரி பக்கத்து வீட்டு நண்பராக குடும்பத்துடன் பேசவேண்டும் என்ற நிபந்தனைக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனால் நடக்கும் கலகலப்பான சம்பவங்களே இந்த படத்தின் கதை. இந்த படம் மிகவும் நன்றாக உள்ளது. ஒரு முறை பார்க்கலாம். 

  


WEATHERING WITH YOU (2020) 

பள்ளியில் படிக்கும் பையனான ஹோடாகா மொரீஷிமா கடினமாக நடந்துகொள்ளும் அவருடைய பெற்றோர்களிடம் இருந்து தப்பி சென்று டோக்கியோ மாநகரத்தில் தஞ்சம் அடைகிறார். அங்கே சந்தித்த கேசுகெ சுகா என்பவரிடம் நட்பாக பழகி அவருடைய சிறிய அளவிலான மேகஸின் பதிப்பக நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். இந்த மேகஸின்க்கான தகவல் சேகரிப்பு பணியில் சந்திக்கும் தோழி ஹினாடாவிடம் வானிலையில் மாற்றம் கொண்டுவரும் அபூர்வ சக்திகள் இருப்பதால் அவருடன் இணைந்து விசேஷ காலங்களில் கொண்டாட்டங்கள் நடக்கும் இல்லங்களில் மட்டும் மழைப்பொழிவு இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வேலையை இந்த குழுவினர் செய்கின்றனர். இந்த அதிகப்படியான மழைப்பொழிவுக்கு காரணம் என்ன ? ஹினாட்டாவின் இந்த சக்திகளால் உருவாகும் ஆபத்தில் இருந்து பையன் ஹோடாகா அவளை எப்படி மீட்கிறான் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...