திங்கள், 12 மே, 2025

GENERAL TALKS - சோசியல் மீடியா காதலுக்கான இடம் இல்லை !


நிச்சயதார்த்தம் செய்த திருமணங்கள் இந்த காலத்துக்கு மட்டும் அல்ல எந்த காலத்திலும் சிறப்பானது ஆகும் ! சமீபத்தில் வலைப்பூ குழுவினருக்கு இணையதள காதலை பற்றிய அபிப்ராயம் மாறியுள்ளது. நம்ம கதாநாயகன் சோசியல் மீடியாவில் பார்த்த ஒரு பெண்ணை கதாநாயகியாக கனவு காண்கிறான். வாய்ஸ் கேட்டது இல்லை. என்ன பண்ணுகிறாள் என்பது கூட கதாநாயகனுக்கு தெரியாது என்றால் நிச்சயதார்த்தம் நடக்கும்போது அந்த பெண்ணை விட்டுவிட்டோம் இன்று இவன் கதறுகிறான். இல்லை எனக்கு புரியவில்லை. இவனின் முகம் கூட பார்க்காத ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையில் சுதந்திரமாக முடிவு எடுக்க நமது கதாநாயகன் எதுக்கு வேறு ஒரு லொகேஷன்னில் இருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இன்றைக்கு நம்முடைய பெண்கள் எப்போதுமே ஆடவருக்கும் மேலே வளர்ச்சி அடைந்து சம்பாதித்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். விளையாட்டுத்தனமாக ரீல்ஸ் போட்டு இருந்த பெண்கள்தான் சில வருடங்களில் காவல்துறை , அரசியல் , விளையாட்டு, பாதுகாப்பு துறை என்று யூனிஃபார்ம் போட்ட கௌரவம் சேர்த்த குடும்பத்தின் சமூகத்தின் அங்கங்களாக மாறுகிறார்கள். இப்படி இலட்சியத்துக்காக போராடும் பெண்கள் அவர்களுடைய போராட்டத்தில் ஒரு ரிலாக்ஸ்ஸேஷனுக்கு சோசியல் மீடியா பயன்படுத்தினால் அங்கேயும் காதலிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணுகிறார்கள் என்றால் எந்த வகையில் நியாயம். காலாகாலமாக பெண்கள் சொல்லும் கருத்துகளுக்கு என்று தனியான மதிப்பு உள்ளது. சோசியல் மீடியா என்பது பொழுதுபோக்கு இடம் என்பதை விட கருத்து மற்றும் எண்ணங்களை பகிரும் ஒரு இடமாக இருக்கிறது. இந்த காலத்திலும் ஏதோ நேரில் பார்த்து பழகிய பெண்ணிடம் நடந்துகொள்வது போல சோசியல் மீடியாவில் பேசிவிட்டார்கள் என்பதற்காக காதலில் விழுந்துவிட்டேன் என்று கனவுக்குள் மூழ்குவது இளைஞர்களுடைய முட்டாள்தனம் என்றே சொல்லலாம். யாராவது உங்களிடம் சோசியல் மீடியாவில் பேசினால் அவர்கள் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது மட்டுமே அர்த்தமாகும். சினிமா , சீரியல்களை பார்த்து பேசினாலே காதல் என்ற கற்பனையை வளர்த்து குட்டி சுவாராக போகாதீர்கள் என்று வலைப்பூ சார்பில் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் ! 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...