திங்கள், 24 டிசம்பர், 2018

CINEMATIC WORLD - 020 - THE PEANUTS MOVIE - TAMIL REVIEW - பள்ளிக்கூட காதல் கதை !! - [REGULATION-2024-00037]








உங்களுக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் நினைவில் இருக்கா ? அப்படின்னா இந்த படம் பாருங்களேன் ! சார்லி அவன் நேசிக்கும் அந்த ரெட் கேர்ள்ளை இம்ப்ரஸ் பண்ண ரொம்ப ரொம்ப அதிகமா முயற்சி பண்ணுவான் ஆனால் எல்லாமே சொதப்பல்லாக மட்டும்தான் முடியும். அனிமேஷன் ரொம்ப ரொம்ப கியூட்டாக இருக்கும் , எனக்கு தெரிஞ்சு இந்த படத்தில் மட்டும்தான் பெரியவர்களை இல்லாமல் வெறும் ஜூனியர் கத்தாப்பாத்திரங்களை கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார்கள் . சார்லஸ் எம் ஸ்கால்ஸ் என்ற கதை ஆசிரியரின் நியூஸ் பேபர் நெடுந்தொடர் (நம்ம ஊரு கன்னித்தீவு மாதிரி ) கதிகாப்பாத்திரங்களின் CGI வெர்ஷன்தான் இந்த படம். அமெரிக்க ஆடியன்ஸ்க்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கலாம். இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது , இந்த திரைப்படம் ஒரு கலகலப்பான அனிமேஷன் திரைப்படம் , வாழ்க்கை முழுவதும் சின்ன சின்ன தோல்விகள் சந்தித்தாலும் ஒரு நல்ல  காரணத்துக்காக வெற்றியாளராக மாற ஆசைப்படும் குட்டி பையன் சார்லி ப்ரவுன் மேலும்  அவனுடைய நட்பு பெட் ஆக இருக்கும் ஸ்னுபியின் கலகலப்பான குறும்புகள்தான் இந்த படத்தின் திரைக்கதை என்பதால் கதையாக பார்த்தால் இதுவரைக்குமே நீங்க பார்த்த எந்த படத்திலும் இல்லாத ஒரு SCREENWRITING லெவல் இந்த படத்தில் இருப்பதால் இந்த திரைப்படமும் நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம். அப்புறம் எப்போதும் போலத்தான் அந்த ஃபாலோ பட்டன் ப்ரெஸ் பண்ணுங்கள். #AD களை கிளிக் பண்ணினால் உங்களுக்கு புண்ணியமாக போகும் !! உங்களுடைய பள்ளிக்கூட காதல் கதைகளை கமெண்ட்டில் போடுங்கள் பார்க்கலாம் !! இந்த படம் ஒரு நியூஸ் பேபர் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கதை (நம்ம ஊரு தினத்தந்தியில் இருக்கும் கன்னித்தீவு கதையை போல வெளிநாட்டில் இருக்கும் ஒரு கதை ) தொடரை அடிப்படையாக கொண்டு வந்தது என்பதால் மொத்த படத்தையும் அந்த காமிக் கதைகளை எந்த ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்களோ அதே ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்கள். இந்த படத்துக்கு இதுவும் ஒரு பிளஸ் பாய்ண்ட் என்று அமைந்து இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...