செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

SUPER ULTRA MEGA AWESOME SECRET OF SUCCESS ! HERE, YOU CAN READ IT FOR FREE !!! - [REGULATION-2024-00003]




இந்த பிரபஞ்சத்தில் சக்ஸஸ் எனப்படும் வெற்றியாக இருந்தாலும் ஃபெய்லியர் என்று அழைக்கப்படும் தோல்வியாக இருந்தாலும் அப்படி ஒரு விஷயமே இல்லவே இல்லை. அதுதான் உண்மை, இப்போது புரியும்படியாக சொல்லப்போனால் சாலையில் போகும்போது டிராபிக்ல சிக்கறதாக இருக்கட்டும், எக்ஸாம் நடக்கும்போது இங்க் பேனா கை நழுவி கீழ விழுந்து உடைஞ்சு போறதா இருக்கட்டும் இல்லையென்றால் ஒரு விண்கல் பூமி மேல் விழுவதாகவே இருக்கட்டும் இது எல்லாமே வாழ்க்கையில நடக்கற சம்பவங்கள். அதுபோலதான் ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடிஞ்சால் சக்ஸஸ் , இல்லை முடியாமல் போனால் ஃபெய்லியர். இங்கே பிரச்சனை எங்கே ஆரம்பம் ஆனது என்றால் தமிழ் சினிமால வெளிய வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருக்கும் காட்சிகள் போலவே நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் என்ற எண்ணம்தான். வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க வேண்டும். 

எதுக்கு சமமாக பார்க்க வேண்டும் ? காரணம் என்னவென்றால் இரண்டுமே வெறும் சம்பவங்கள். இல்லை வெற்றிகள் காலம் முழுக்க நிலைக்கும் தோல்வி அடைஞ்சா காலம் முழுக்க குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். யாருமே உதவ மாட்டார்கள். யாருக்குமே நம்மை பிடிக்காது. அதனால வெற்றி அடைய வேண்டும், வாழ்க்கையை பார்க்க வேண்டும் அப்படியெல்லாம் சொல்லலாம். ஆமாம். கரெக்ட் தான். ஆனால் பிரச்சனை நீங்க அடைஞ்ச தோல்வியில் இருக்கா ? இல்லையின்னா அதை தெரிந்துகொள்ளும் மனிதர்களிடம் இருக்கா ?

ஒரு பிரச்சனையை முடிக்காமல் அதனை மிகைப்படுத்தி சொல்லுவதில் என்னதான் சந்தோஷம் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த உலகம் கம்ப்யூட்டர் பக்கம் போகுது. அனைத்து தகவலையும் கணினியால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் எந்த தகவலையும் எந்த நேரத்திலும் அக்செஸ் பண்ணி எடுத்துக்கொடுக்கவும் முடியும். பத்து வருஷத்துக்கு முன்னாடி தகவலை கேட்டால் கூட கம்ப்யூட்டர் எடுத்து ரெடியாக வைத்துக்கொண்டு எத்தனை நகல் பிரிண்ட்அவுட் எடுக்கணும்னு கேட்கும் ! ஆனால் மனிதர்கள் அப்படியா ? வாழ்க்கை என்றால் மிஸ்டேக் பண்ணவேண்டும். சும்மா கம்ப்யூட்டர் மாதிரி இருக்க வேண்டும் என்று இளைய தலைமுறைய திட்ட கூடாது. அப்படின்னா கணினியிடம் மனித இனமே தோற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியுமா ? 

முதலில் தோல்வி எல்லாம் தோல்வியும் இல்லை, வெற்றி எல்லாம் வெற்றியும் இல்லை.. ஒரு நெகட்டிவ் ஆன சம்பவம் நடந்தால் அது தோல்வி . அதுவே பாசிட்டிவ் ஆனா சம்பவம் நடந்தால் அது வெற்றி, வெறும் ஒரு முதல் ரேங்க் வாங்கிய மாணவனை பாராட்டும் இந்த உலகம் அதே கல்வி நிறுவனம் எதனாலே அவனோடு படித்த 49 " முதல் மதிப்பெண் வாங்காத மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள் " என்று கோபப்படவில்லை ? அதனால்தான் இந்த ரேங்க்கிங் சிஸ்டம் தப்பு. மாணவர்கள் படிக்கும் விஷயம் அவர்களுக்கு புரிய வேண்டும், அந்த விஷயங்களால் நடைமுறை வாழ்க்கையில் பலன்கள் இருக்க வேண்டும், உலகம் முழுவதும் அக்சப்ட் செய்யபபட்டால் அதுதான் சரியான விஷயம் என்று சொல்ல முடியாது. அதை விட பெட்டர் ஆன விஷயங்கள் இந்த உலகத்தில் இனிமேல் உருவாகும். கடைசியாக 80 வயதில் நோய்வாய்ப்படும்போது இளமையில் கிடைத்த வெற்றிகளும் தோல்விகளும் பெரிய விஷயம் இல்லை. உடல் நிலையை சரிசெய்துகொள்வதுதான் பெரிய விஷயம். ஆனால் இதுதான் உலகம், இப்படிபட்ட உலகத்தில்தான் வாழ வேண்டும். அப்படின்னு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். உண்மையில் ஒருவருடைய தனிப்பட்ட நலனை கடந்து அடுத்தவர்கள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்தாலே போதும் வாழ்க்கை ரொம்பவே அருமையாக இருக்கும். 

இன்றைக்கு காலையில் பசிக்கிறது என்றால் உங்களுக்கு தேவை சாப்பாடு, உங்கள் சோசியல் மீடியா அக்கவுண்ட் ஓபன் பண்ணவேண்டும் என்றால் உங்களுக்கு தேவை பாஸ்வேர்டு. அடுத்த நாள் வேலை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு தேவை தூக்கம். இந்த லைஃப்ல கடைக்கு சென்று பொருள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு தேவை பணம், இங்கே எந்த வகையிலும் வெற்றி எனும் சம்பவமோ தோல்வி எனும் சம்பவமோ பெரிய மாற்றங்களை கொண்டுவரவில்லையே ? அப்புறம் எதுக்காக வெற்றி அல்லது தோல்விகளை மிகைப்படுத்த வேண்டும். ஒருவரை பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற ஏற்றத்தாழ்வு நிலைகள் இருக்கும் வரைக்கும் வெற்றிகளும் தோல்விகளும் இது போன்று மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை உருவாக்குவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...